தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 8 லட்சம் மாணவ மாணவியர் எழுதிய 11ம் வகுப்பு தேர்வு முடிவு இன்று காலை 10 மணிக்கு வெளியானது. தேர்வு முடிவுகளை மாணவர்கள் www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in, www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்களில் வாயிலாக தெரிந்து கொள்ளலாம் அல்லது தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் மதிப்பெண்களை தெரிந்துகொள்ளலாம். கடந்த ஜூன்-20ம் தேதி 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானதை தொடர்ந்து இன்றைய தினம் 11ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது.
மேலும் படிக்க | தொழில்துறையின் தூண் தமிழ்நாடுதான் - முதலமைச்சர் பெருமிதம்
கடந்த மே மாதம் 10ம் தேதி 11ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளுக்கான பொதுத்தேர்வு தொடங்கியது. 3119 தேர்வு மையங்களில் நடைபெற்ற இந்த தேர்வில் 4,33,684 மாணவர்களும், 4,50,198 எழுதினர். இந்த ஆண்டு 11ம் வகுப்பின் தேர்ச்சி சதவீதம் 90.7% ஆகும், வழக்கம்போல மாணவர்களை விட மாணவிகளே இந்த ஆண்டு அதிகம் தேர்ச்சிபெற்றுள்ளனர். மாணவர்களைவிட, மாணவிகள் 10.13% அதிகமாக தேர்ச்சி பெற்றுள்ளனர். ஜூலை-7ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று அறிவித்திருந்த நிலையில் முன்னதாகவே தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது.
மொத்தமாக 8,43,675 பேர் எழுதியதில் 7,59,856 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர், மாணவர்கள் 84.86% தேர்ச்சியும், மாணவிகள் 94.99% தேர்ச்சியும் பெற்றுள்ளனர். அரசுப் பள்ளிகளில் 83.27% தேர்ச்சியும், தனியார் பள்ளிகள் 99.35% தேர்ச்சியும் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் 91.65% தேர்ச்சியும் பெற்றுள்ளது.
மேலும் படிக்க | அக்னிபாத் திட்டம் - தமிழக காங்கிரஸ் என்ன செய்யப்போகிறது?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR