திமுகவை டார்கெட் செய்து கொங்கு மண்டலத்தில் பரப்பப்படும் வதந்திகள், வீடியோக்கள்

DMK Faces Misinformation Attacks in Kongu Mandal: கொங்கு மண்டலத்தில் மதமாற்றம் அதிகமாக நடப்பதாகவும், திமுக ஆட்சியில் அதிகமாக கோயில்கள் இடிக்கப்படுவதுடன் சர்ச்சுகள், மசூதிகளுக்கு மட்டும் திமுக பாதுகாப்பு கொடுப்பதாகவும் வாட்ஸ்அப்களில் செய்திகள் பரப்ப்படுகின்றன.   

Written by - S.Karthikeyan | Last Updated : Dec 20, 2023, 01:14 PM IST
  • கொங்கு மண்டலத்தில் திமுக டார்கெட்
  • பரவும் போலி வீடியோகள், வதந்திகள்
  • தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
திமுகவை டார்கெட் செய்து கொங்கு மண்டலத்தில் பரப்பப்படும் வதந்திகள், வீடியோக்கள் title=

நாடாளுமன்ற தேர்தல் இன்னும் சில மாதங்களில் வர இருக்கும் நிலையில், தமிழ்நாடு முழுவதும் வாட்ஸ்அப் குழுக்களில் போலி செய்திகள் மற்றும் நடைபெறாத சம்பவத்தை, வேறு ஏதோ தனிப்பட்ட காரணங்களுக்காக நடைபெற்ற பிரச்சனைகளின் வீடியோவை, திரித்து உள்நோக்கத்துடன் திமுக அரசு வேண்டுமென்றே செய்வதாக குற்றம்சாட்டும் வீடியோகள் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றன. குறிப்பாக கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூரை உள்ளடக்கிய கொங்கு மண்டலத்தில் இப்படியான வீடியோக்களின் பரவல் அதிகமாக இருக்கிறது. மேலும், மதம் மாற்றம் நடைபெறுவதற்கு திமுக உடந்தையாக இருப்பதாக கூறும் செய்திகளும் அண்மைக் காலமாக அதிகம் பரப்பப்படுகின்றன.

லேட்டஸ்டாக பரவியிருக்கும் ஒரு வீடியோவில் "கோயம்புத்தூரில் அன்னூர் வரதராஜ பெருமாள் கோவிலை சொந்த பணத்தில் இந்துக்கள் புனரமைப்பதை  இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் தடுப்பதாகவும், ஆனால் திருப்பூர் மகாலட்சுமி நகரில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த மசூதிக்கு நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைக்க முயன்றால் அதனை தடுக்க திமுக எம்எல்ஏ முதலமைச்சருக்கு கடிதம் எழுதிகிறார். சட்டவிரோத சர்ச்சுகள் இடிக்கப்பட்டால் எம்எல்ஏ மன்னிப்பு கேட்டு அதனை கட்ட பணமும் வழங்கி அரசிடம் நிதியும் பெற்று தருவார். கள்ளக்குறிச்சி மாவட்டம், பொருவளூரில் மோடங்கால் மலையில் இந்த கொடுமை நடந்துள்ளது. 

மேலும் படிக்க | கருவில் இருந்தே துரத்திய பகை..! 19 ஆண்டுகள் கழித்து பழிதீர்த்த மகன்!

சட்டத்துக்குட்பட்டு செயல்படும் இந்து கோயில்கள் கட்டிங் கொடுக்காவிட்டால் சீல், சட்டவிரோத சர்ச்சுகள் மற்றும் மசூதிகளுக்கு திமுக தாராளம். இதுதான் திமுகவின் மதச்சார்பின்மை, இந்துக்களே சிந்திப்பீர்" என முதலமைச்சர் முக ஸ்டாலினின் கேலிச் சித்திர புகைப்படமும், கோவில் முன்பு பார்ப்பனர்கள் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு மாலை அணிவித்து பொட்டு வைக்கும் புகைப்படத்தையும் இணைத்து வீடியோ பரப்பப்படுகிறது. இதுபோன்று இன்னும் பல வீடியோக்கள் திமுகவையும், திமுக தலைவர்களை குறிப்பிட்டும் இந்துக்களுக்கு எதிராக இருப்பதாக வீடியோக்கள் தொடர்ச்சியாக பரப்பப்பட்டு வருகின்றன. இதில் வேடிக்கை என்னவென்றால் நடக்காத சம்பவங்கள், அல்லது வேறு எங்கோ நடைபெற்ற சம்பவங்களை எல்லாம் திமுகவை தொடர்புபடுத்தியும் அதன் தலைவர்களை தொடர்புபடுத்தியும் வீடியோக்கள் உருவாக்கப்பட்டு பரப்பப்படுகின்றன.

தினமும் வாட்ஸ்அப் குழுக்களில் நூற்றுக்கணக்கில் பகிரப்படும் இந்த வீடியோக்கள் சாமானிய மக்களிடம் நேரடியாக சென்று சேருகின்றன. அதில் இணைப்பு செய்தியாக " திமுக ஊடகங்கள் இதனை திட்டமிட்டு மறைக்கின்றன, தொலைக்காட்சிகள் சொல்லாத உண்மை வீடியோ இது" என்றெல்லாம் சேர்த்து பரப்பப்படுவதால் மக்களும் உண்மையென நம்பும் நிலை உள்ளதாக திமுக நிர்வாகிகள் கூறுகின்றனர். இதுகுறித்து திமுக நிர்வாகி ஒருவர் பேசும்போது, " நாளும் நூற்றுக்கணக்கான வீடியோக்கள், வாட்ஸ்அப் செய்திகள் பரப்பப்படுகின்றன. கட்சிகாரர்களாக இருந்தாலும் எங்களால் எதுவும் செய்ய முடியவில்லை. 

திமுக கட்சிக்காரர்களே சிலர் இதனை உண்மை என நம்பி கொள்ளவும் செய்கின்றனர். இதுபோன்ற வதந்திகளின் உண்மை தன்மை குறித்து மக்கள் தேடி பார்ப்பதில்லை அல்லது எப்படி தேடுவது? எங்கு தேடுவது என்ற புரிதல் கூட இல்லை. கூகுளில் சாதாரணமாக தேடினாலே கிடைக்கும் செய்திகளைகூட திரித்து அரசுக்கு எதிராகவும், திமுகவுக்கு எதிராகவும் திட்டமிட்டு பரப்புகிறார்கள். இதனை தடுக்காவிட்டால், போலி செய்தி பரப்புவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்காவிட்டால் திமுக பெரிய விலை கொடுக்க நேரிடும். தமிழ்நாடும் பெரிய அளவுக்கு பாதிக்கப்படும். வடமாநிலங்களில் போலி செய்திகளை சீக்கிரம் நம்பிக் கொள்வார்கள், தமிழ்நாட்டில் மெதுவாக நடந்து கொண்டிருக்கிறது. இதுதான் இப்போதைய நிலைமை. ஆட்சியை வைத்துக் கொண்டு கூட இதுபோன்ற போலிசெய்திகளை தடுக்க முடியவில்லை என்றால் என்ன செய்வது?" என்று ஆதங்கத்துடன் கூறினார்.  

மேலும் படிக்க | பொன்முடி விடுதலை ரத்து... அமைச்சரவையில் வரப்போகும் மாற்றம்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News