திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நாளை மாலை 5 மணிக்கு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சட்டப்பேரவை கூட்டப்பட்டால் செயல்படும் விதம் குறித்து ஆலோசிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது எடப்பாடி பழனிசாமி அரசு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த தமிழக ஆளுநர் உத்தரவிடக்கோரி சென்னை ஐகோர்ட்டில் ஏற்கனவே திமுகவினர் வழக்கு தொடர்ந்துள்ளது.
அதேசமயம் இன்று காலை திடிரென்று 18 எம்.எல்.ஏ.க்கள் மீது சபாநாயகர் நடவடிக்கை எடுத்து இருப்பதால் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று மூத்த வக்கீல்களுடன் அவசர ஆலோசனை நடத்தினார்.
எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்க விவகாரத்தில் எடப்பாடி அரசை காப்பாற்ற தவறான வழியில் சென்று சபாநாயகர் பதவிக்குரிய மாண்பை கெடுத்துவிட்டார். பேரவையை சந்தித்து வெற்றி பெற முடியாத நிலையை தகுதி நீக்க நடவடிக்கை காட்டுகிறது என ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
Speaker disqualifying 18 MLAs(TTV faction) is not right,he has done this deliberately to reduce majority of the house: MK Stalin pic.twitter.com/tuR9OlC2oj
— ANI (@ANI) September 18, 2017
இந்த நிலையில் திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நாளை மாலை 5 மணிக்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.