தமிழக ஆளுநர் ஆர்.என்.வி மற்றும் ஆளும் திமுக அரசுக்கு இடையே மோதல் போக்கு அதிகரித்துக் கொண்டு வருகிறது. அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரத்தில் முதலமைச்சரின் அதிகாரத்தில் தலையிடும் வகையில் ஆளுநர் தெரிவித்த கருத்துகள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் திமுக கூட்டணிக் கட்சிகளிடையே கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மற்றும் திருமாவளவன், கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்டோர் கடுமையாக கண்டித்தனர். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, அரசியல் அமைப்பு சட்டத்துக்கு எதிராக செயல்படும் ஆளுநர் ஆர்.என்.ரவியை தமிழக ஆளுநர் பதவியில் இருந்து நீக்கக்கோரி மதிமுக சார்பில் கையெழுத்து இயக்கம் நடத்தப்படும் என்று அறிவித்தார்.
மேலும் படிக்க | அரசு கல்லூரிகளில் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடங்குவது எப்போது? அறிவிப்பு இதோ!
இதனை சென்னையில் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு தொடங்கி வைக்க, பெரம்பலூரில் திமுக துணைப்பொதுச்செயலாளர் ஆ.ராசா பங்கேற்று தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், அரசியல் சட்ட பாதுகாப்போடு ஒரு முட்டாள், ஒரு மூடத்தனமான மனிதர் இங்கே வந்து கவர்னராக இருக்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவியை கடுமையாக விமர்சித்தார்.
ஆ.ராசா பேசும்போது, " 2024-ல் யார் பிரதமர் என்பதை நம் முதலமைச்சர் முடிவு செய்வார். பிரதமர் வந்த இரண்டாவது நாள் ஆளூனர் மாளிகையில் வழியனுப்பு விழா இருக்காது. ஆர்.என்.ரவி தானாவே ஓடிவிடுவார். அந்த சூழலை உருவாக்குவோம். யார் அமைச்சராக இருக்கலாம்? யார் அமைச்சராக இருக்க கூடாது? என முடிவு எடுக்க கூடியவர் முதலமைச்சர். அப்படிதான் சட்டம் சொல்கிறது. அதிலேயும் கவர்னர் குறுக்கே வந்து கருத்து சொல்கிறார். முதலமைச்சருக்கு நல்லபெயர் கிடைக்ககூடாது என ஆளுனர் செயல்படுகிறார். தமிழர்களை பிரதமர் ஆக்கப்போகிறோம் என்கிறார். வந்தால் நல்லது. கவர்னரை தூக்கி எறிகின்ற நாள் வெகு தொலைவில் இல்லை" என்றார்.
மேலும் படிக்க | செந்தில் பாலாஜியை பாஜகவிற்கு அழைக்கிறார் அண்ணாமலை: திமுக எம்.பி செந்தில்குமார் பளீர்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ