பிப்ரவரி 14 ஆம் தேதி தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட் தாக்கல் செய்கிறார்.

வரும் பிப்ரவரி 14 ஆம் தேதி 2020-21 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. அதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.

Written by - Shiva Murugesan | Last Updated : Feb 7, 2020, 10:13 PM IST
பிப்ரவரி 14 ஆம் தேதி தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட் தாக்கல் செய்கிறார். title=

சென்னை: வரும் பிப்ரவரி 14 ஆம் தேதி 2020-21 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த பட்ஜெட்டை தமிழக நிதித்துறை அமைச்சரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்ய உள்ளார். அன்று காலை 10 மணிக்கு துணை முதல்வரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் நிதிநிலை அறிக்கையை தமிழக சட்டபேரவையில் தாக்கல் செய்கிறார்.

இதுக்குறித்து துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறுகையில், 2020-2021 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மக்களின் அனைத்து எதிர்பார்ப்புக்களும் பூர்த்தி செய்யப்படும். அதாவது மக்களின் எதிர்பார்ப்பான பொருளாதார மேம்பாடு, தொழில் வளர்ச்சி, நிதிநிலை உட்பட அனைத்தும் பூர்த்தி செய்யும் வகையில் பட்ஜெட் இருக்கும்.

2021 ஆம் ஆண்டு தமிழகத்தில் தேர்தல் நடைபெற உள்ளதால், இதுதான் எடப்பாடி தலைமையிலான அதிமுக அரசு தாக்கல் செய்யும் முழுமையான பட்ஜெட் ஆகும். அடுத்த வருடம் இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

நாடாளுமன்ற தேர்தலி அதிமுக அரசு தோல்வி அடைந்திருந்தாலும், உள்ளாட்சி தேர்தலில் அமோகமாக வெற்றி பெற்றது. அதேவேளையில் அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் வர உள்ளதால், அதை மனதில் வைத்து, மக்களை கவரும் வகையில் இந்த பட்ஜெட் இருக்கும்.

அண்டை மாநிலமான கேரளாவில் இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. தமிழகத்தில் பிப்ரவரி 14 ஆம் தேதி தாக்கல் செய்ய உள்ளதால், தமிழக மக்களிடைய மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.

உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.

Trending News