Children’s Vaccination Registrations: வரும் ஜனவரி 3ம் தேதி முதல் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதற்கான பதிவு இன்று முதல் தொடங்குகிறது. தற்போது 15 முதல் 18 வயது வரையிலான குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்படும். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு, குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படும் என பிரதமர் மோடி அறிவித்தார். இதனால், 15- 18 வயதான சிறுவர்களுக்கு கோவாக்சின் தடுப்பூசி போட COWIN செயலியில் இன்று முதல் முன்பதிவு செய்யலாம் என கோவின் தலைவர் ஷர்மா தெரிவித்துள்ளார்.
பதிவு செய்ய என்ன செய்ய வேண்டும்?
* முதலில் gov.in இணையதளத்திற்கு செல்லவும்.
* நீங்கள் COWIN பதிவு செய்யவில்லை என்றால் முதலில் பதிவு செய்ய வேண்டும்.
* இங்கு குழந்தையின் பெயர், வயது போன்ற சில தகவல்களை கொடுக்க வேண்டும்.
* பதிவு செய்து முடிந்ததும், உங்கள் மொபைலில் உறுதிப்படுத்தல் செய்தி வரும்.
* பின்னர் உங்கள் பகுதியின் பின் குறியீட்டை உள்ளிடவும்.
* தடுப்பூசி மையங்களின் பட்டியல் உங்கள் முன் வரும்.
* அதன் பிறகு உங்கள் தடுப்பூசி ஸ்லாட்டை தேதி மற்றும் நேரத்துடன் பதிவு செய்யவும்.
ALSO READ | ஒமிக்ரானுக்கு எதிராக மற்றொரு தடுப்பூசி..! ஆய்வில் தகவல்
இதை செய்த பிறகு, தடுப்பூசி (Corona Vaccine) மையத்திற்குச் சென்று உங்கள் குழந்தைக்கு கொரோனா தடுப்பூசி போட முடியும். தடுப்பூசி மையத்திற்குச் செல்வதற்கு முன், நீங்கள் அடையாளச் சான்று மற்றும் ரகசியக் குறியீட்டை வழங்க வேண்டும்.
அரசு மையத்தில் குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படும்
அரசு மையத்தில் குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படும். அதேசமயம் தனியார் மருத்துவமனையிலும் குழந்தைக்கு தடுப்பூசி போடப்படும். அரசு தடுப்பூசி மையத்தில் குழந்தைகளுக்கு இலவச தடுப்பூசி போடப்படும். அதேசமயம், தனியார் மருத்துவமனைகளில், தடுப்பூசிக்கான விலையை செலுத்த வேண்டும்.
இந்நிலையில், நாடு முழுவதும் 15-18 வயதினருக்கு வரும் 3-ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள அரசு அனுமதி அளித்த நிலையில் இதற்கான முன்பதிவு கோவின் இணையதளத்தில் தொடங்கியது.
ALSO READ | Omicron: இதுவரை ஒமிக்ரான் தொற்றில்லாத 11 மாநிலங்கள்..! எவை?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR