சகோதரர் ரஜினிக்கு வாழ்த்துகள்: தமிழிசை!

துணுச்சலுடன் அரசியல்களத்திற்கு வருகிறேன் என அறிவித்திருக்கும் சகோதரர் ரஜினிக்கு வாழ்த்துகள்

Last Updated : Dec 31, 2017, 09:47 AM IST
சகோதரர் ரஜினிக்கு வாழ்த்துகள்: தமிழிசை! title=

துணுச்சலுடன் அரசியல்களத்திற்கு வருகிறேன் என அறிவித்திருக்கும் சகோதரர் ரஜினிக்கு வாழ்த்துகள் என தமிழிசை சௌந்தராஜன் டிவிட் பதிவு.

தான் அரசியலுக்கு வருவது உறுதி என்று நடிகர் ரஜினிகாந்த் இன்று அறிவித்துள்ளார். தனி கட்சி ஆரம்பித்து 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவேன் என்று அவர் உறுதியளித்துள்ளார். நான் அரசியலுக்கு வருவது காலத்தில் கட்டாயம் என்று அவர் கூறியுள்ளார். பதவி, புகழுக்காக அரசியலுக்கு வரவில்லை என்று அவர் கூறியுள்ளார். 45 வயதில் எனக்கு பதவி ஆசை இல்லை, தற்போது வருமா என்றும் அவர் தெரிவித்துள்ளார். செயல் திட்டங்களை நிறைவேற்றாவிட்டால் 3 ஆண்டுகளில் ராஜிநாமா செய்வேன் என்று ரஜினி கூறியுள்ளார்.

நல்லதே நினைப்போம் - நல்லதே செய்வோம் - நல்லதே நடக்கும் என்பது எங்கள் கொள்கை நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார். உண்மை- உழைப்பு- உயர்வு என்பதே எங்களின் மந்திரம் என்று அவர் கூறியுள்ளார். எனக்கு தொண்டர்கள் தேவையில்லை, காவலர்கள் வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். 

தமிழகத்தில் அரசியல் மிகவும் கெட்டுவிட்டது. கடந்த ஓராண்டில் நிகழ்ந்த அரசியல் நிகழ்வுகள் தமிழகத்திற்கே தலைகுனிவு என்று அவர் கூறியுள்ளார். இந்த சூழலில் அரசியலுக்கு வராவிட்டால் குற்ற உணர்வு உறுத்தும் என்று ரஜினி கூறியுள்ளார். 

ஆன்மீக அரசியல் அதுவே எனது நோக்கம் என்று ரஜினி பேசினார். ஆண்டவனின் அருள், மக்களின் ஆதரவு என்க்கு கிடைக்கும் என்று நம்பிக்கை உள்ளது என்று அவர் கூறியுள்ளார். 

இந்நிலையில் இன்று நடிகர் ரஜினிகாந்த் தனது அரசியல் அறிவிப்பு வரவேற்று ரஜினி ரசிகர்கள் வெடி வைத்து கொண்டடி வருகின்றனர். மேலும் பாஜக-ன் தமிழிசை சௌந்தரராஜன் இதுகுத்து தனது டிவிட்டர் பக்கத்தில் டிவிட் பதிவு செய்துள்ளார். அதில்,

 

 

Trending News