காதலர்கள்போல் வாக்கு சேகரியுங்கள் - துரைமுருகன் அட்வைஸ்

கும்பலாக செல்லாமல் காதலர்கள் போல் தனித்தனியாக வாக்கு சேகரிக்க வேண்டும் என திமுகவினருக்கு பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகன் அறிவுறுத்தியுள்ளார். 

Written by - S.Karthikeyan | Last Updated : Feb 14, 2022, 09:52 PM IST
  • குடியாத்தம் பகுதியில் துரைமுருகன் வாக்கு சேகரிப்பு
  • காதலர்கள் போல் வாக்கு சேகரிக்க திமுகவினருக்கு அறிவுறுத்தல்
  • ஆளும்கட்சியின் மானத்தை காபாற்றுமாறு வேண்டுகோள்
 காதலர்கள்போல் வாக்கு சேகரியுங்கள் - துரைமுருகன் அட்வைஸ் title=

நகர்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் குடியாத்தத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பொதுப்பணித்துறை அமைச்சர் வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து பேசினார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழக முதலமைச்சர் அகில இந்திய தலைவராக உருவெடுத்து வருவதாக தெரிவித்தார். அடுத்த 25 ஆண்டுகள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி நீடிக்கும் எனக் கூறிய அவர், ஆட்சிப்பொறுப்பேற்ற பிறகு கிட்டதட்ட 14 மாதங்கள் கொரோனா பாதிப்பை எதிர்கொள்ள வேண்டியிருந்ததாக கூறினார்.

மேலும் படிக்க | டெல்லிக்கு வெளியே முதல்வர்கள் கூட்டம் - மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

தொடர்ந்து பேசிய அவர், "6 மாத பட்ஜெட் தான் போட்டுள்ளோம், இனி வரும் நாளில் முழு ஆண்டு பட்ஜெட் போட்ட பிறகு சிறப்பாக இருக்கும். இந்த ஆட்சியின் பலன்கள் குடியாத்தம் மக்களுக்கு சென்றடைய நகராட்சி தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் அனைவரும் வெற்றி பெற வேண்டும் அனைவரும் அயராது உழைத்து வெற்றி பெறவேண்டும். ஒரு பெரிய வாய்ப்பு கிடைத்துள்ளது அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நகரமன்ற தலைவர் யார்? என்பதை கட்சியின் தலைவர் முடிவு செய்வார்.

ஆளும் கட்சியாக தி.மு.க. இருக்கும்போது தி.மு.க. உறுப்பினர்கள் வெற்றிபெற்று குடியாத்தம் நகர மன்றத்தை கைப்பற்றினால் தான் தலை நிமிர்ந்து நடக்க முடியும். ஓட்டு சேகரிப்பின் போது கும்பலாக சென்று ஓட்டு கேட்டால் அவர்கள் ஓட்டு போடுகிறேன் என்று தான் சொல்வார்கள். இல்லையென்றால் தலையை மட்டும் ஆட்டுவார்கள். அப்படி கும்பலாக செல்லாமல் காதலர்கள் போல் தனித்தனியாக சென்று வாக்காளர்களை சந்தியுங்கள் என திமுகவினருக்கு அறிவுறுத்தினார். 

மேலும் படிக்க | திமுகவில் மீண்டும் ஐக்கியமான கு.க.செல்வம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News