மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்!

பிரசித்திபெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்!!

Last Updated : Apr 8, 2019, 01:35 PM IST
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்! title=

பிரசித்திபெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்!!

மதுரையில் சித்திரை திருவிழா துவங்கியதையடுத்து இன்று  மீனாட்சி அம்மன் திருக்கோயிலில் கொடியேற்றும் நிகழ்வு நடைபெற்றது. விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். முன்னதாக கோயில் கம்பத்தடி மண்டபம் கொடி மரம் முன்பு அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் பிரியாவிடையுடன் எழுந்தருள்  சிறப்பு பூஜைகளை தொடர்ந்து வேத மந்திரங்கள் மங்கள வாத்தியங்கள் முழங்கிட  கொடியேற்றம் வெகு விமர்சையாக நடைபெற்றது. 

இதனை தொடர்ந்து  தினமும் காலை, மாலை என இரு வேளைகளிலும் மீனாட்சி அம்மனும், சுந்தரேஸ்வரர்  பிரியாவிடையுடன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி நான்கு மாசி வீதிகளையும் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாளிக்கிறார்.

மேலும் விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வரும் 15 ஆம் தேதி இரவு 8 மணிக்கு அம்மன் சன்னதி ஆறுகால் 11 த்தில் மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகமும் , 16 ஆம் தேதி திக்விஜபமும், மீனாட்சி திருக்கல்யாணம் வரும் 17 ஆம் தேதியும், வரும் 18 ஆம் தேதியன்று காலை மாசி வீதிகளில் திருத்தேரோட்டமும் நடைபெறுகிறது . 

மேலும்,  சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்ச்சி வரும் 12 ஆம் தேதி நடை பெறுகிறது. மதுரையில் தேர்தல் நாள் நெருங்கி வரும் நிலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் மதுரையில் கூடும் சித்திரை திருவிழாவும் துவங்கியுள்ளதையடுத்து மதுரை நகரமே விழா கோலம் பூண்டுள்ளது.

 

Trending News