சென்னையில் ஹெல்மட் அணியாதவர்களுக்கு அபராதம்

சென்னையில் இருசக்கர வாகனத்தின் பின்னால் தலைக்கவசம் அணியாமல் அமர்ந்து சென்றவர்கள் மீது சென்னை போக்குவரத்து காவல்துறை வழக்குப்பதிவு செய்தனர். 

Written by - Chithira Rekha | Last Updated : May 23, 2022, 03:17 PM IST
  • வண்டியில் பின்னால் அமர்வோருக்கு ஹெல்மெட் கட்டாயம்
  • அணியாதவர்களுக்கு அபராதம் விதிப்பு
  • சென்னை போக்குவரத்து போலீஸ் சிறப்புத் தணிக்கை
சென்னையில் ஹெல்மட் அணியாதவர்களுக்கு அபராதம் title=

சென்னையில் இரு சக்கர வாகனத்தின் பின்னாள் அமர்ந்து வருபவர்களும் ஹெல்மட் அணிந்து வருவது கட்டாயம் என ஏற்கனவே விதி இருந்தாலும் பெரும்பாலோர் இதைக் கடைப்பிடிப்பதில்லை. சாலை விபத்துகளைக் குறைப்பது குறித்து ஆய்வு மேற்கொண்டபோது தலைக்கவசம் அணியாமல் சென்றவர்களே அதிக அளவில் உயிரிழப்பது தெரியவந்தது.

போலீசாரின் தீவிர தணிக்கையால் இரு சக்கர வாகனம் ஓட்டும் பெரும்பாலானோர் தலைக்கவசம் அணிந்து வந்தாலும், பின்னால் அமர்ந்து வருபவர்கள் அதைக் கடைப்பிடிப்பதில்லை. இதனைத் தொடர்ந்து, இன்று முதல் இரு சக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்து வருபவர்களும் தலைக்கவசம் அணிய வேண்டுமெனவும், தவறினால் அபராதம் விதிக்கப்படும் எனவும், கடந்த சனிக்கிழமை சென்னை போக்குவரத்துக் காவல்துறையினர் அறிவித்தனர்.

மேலும் படிக்க | சென்னை மக்களே உஷார், இன்று முதல் ஹெல்மெட் கட்டாயம்

இதனைத் தொடர்ந்து, இன்று முதல் இத்திட்டம் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கென சென்னை முழுதும் போக்குவரத்து போலீசார் சிறப்பு வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். பல்வேறு இடங்களில் தலைக்கவசம் அணியாமல் பின்னால் அமர்ந்து வந்தவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. 

ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓடியதாக இன்று மட்டும் 1278 வழக்குகள் பதியப்பட்டுள்ளதாகவும் அவர்களிடமிருந்து தலா 100 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதாகவும் சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது. 

மேலும் படிக்க | TNPSC குரூப்-4 தேர்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள்: சென்னை, கோவையில் நடத்தும் கல்வி மையம்

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News