ரூ.700 கட்டினால் 45 நாளில் ஒரு கிராம் தங்கம் கிடைக்கும்! ஆரம்பம் ஓகே... ஆனா பினிஷ்ஷிங் சரியில்லையே!

தாம்பரத்தில் இயங்கி வரும் பிரபல தனியார் நிறுவனத்தில் பணம் கட்டினால் தங்க காயின் தருவதாக கூறி 30 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது.  

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : May 3, 2022, 07:39 PM IST
  • பலரை ஏஜென்ட்டுகள் மூலம் திட்டத்தில் இணைக்கச் செய்தனர்.
  • அனுராதாவிற்கு 40 கோல்ட் காயிண்கள் கிடைத்துள்ளது.
ரூ.700 கட்டினால் 45 நாளில் ஒரு கிராம் தங்கம் கிடைக்கும்! ஆரம்பம் ஓகே... ஆனா பினிஷ்ஷிங் சரியில்லையே! title=

சென்னை அடுத்த தாம்பரத்தில் காயின்ஸ் பிளஸ் என்ற நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தின் பங்குதாரரான அனிதா என்பவர் மூலமாக இந்நிறுவனம் பலரை ஏஜென்டாக நியமித்துள்ளது.

மேலும், இந்த நிறுவனத்தின் தங்கம் சேர்க்கும் திட்டமாக "ரூபாய் 700 ரூபாய் கட்டினால் 45 நாட்கள் கழித்து ஒரு கிராம் தங்க நாணயம் தரப்படும் " என்ற திட்டத்தை தாம்பரம் பகுதியில் பரப்பத்தொடங்கினர்.

இதற்காக பலரை ஏஜென்ட்டுகள் மூலம் திட்டத்தில் இணைக்கச் செய்தனர். இதனால் ஏஜென்ட்கள் மூலம் பொதுமக்களை காயின்ஸ் பிளஸ் நிறுவனத்தில் இணைத்து பணத்தையும் வசூல் செய்தனர்.

இதில் பூந்தமல்லி சேர்ந்த ஏஜென்ட் அனுராதா என்பவர் சுமார் 30 லட்சம் வரை வசூல் செய்து பணத்தை காயின் பிளஸ் நிறுவனத்தில் கொடுத்து உள்ளார்.

இதில் ஏஜெண்டாக பணிபுரிந்து பணம் வசூல் செய்து கொடுத்ததற்கு அனுராதாவிற்கு 40 கோல்ட் காயிண்கள் கிடைத்துள்ளது. மேலும் பணம் கட்டிய சிலருக்கு 199 கோல்ட் காயின் கொடுக்கப்பட்டது.

மேலும் படிக்க | அடுத்தடுத்த வெற்றி.. ஜெட் வேகத்தில் சம்பளத்தை உயர்த்திய KGF டைரக்டர்! - அதுவும் இத்தனை கோடியா?

பணம் கட்டிய மீதம் உள்ள நபர்களுக்கு கோல்ட் காயின் வழங்காமல் காயின்ஸ் பிளஸ் நிறுவனம் காலம் தாழ்த்தி வந்துள்ளது. இதனால் அனுராதாவிடும் பணம் கொடுத்தவர்கள் தங்கள் பணத்தை திருப்பித் தரும்படி கேட்டுள்ளனர்.

இதையடுத்து காயின் பிளஸ் நிறுவனத்தின் உரிமையாளர் வெங்கடேசன் என்பவரிடம் அனுராதா இதுகுறித்து கேட்டபோது "பணம் தர முடியாது உன்னால் என்ன செய்ய முடியுமோ செய்து கொள்" என மிரட்டியுள்ளார். 

"நீ என்னிடமிருந்து கமிஷன் வாங்கியுள்ளாய், நீயும் என்னுடன் சேர்ந்து காவல்துறையிடம் மாட்டிக் கொள்வாய் " என கூறி அனுப்பியுள்ளார்.

அதனை தொடர்ந்து காயின் பிளஸ் நிறுவனத்தின் உரிமையாளர் வெங்கடேசன் அடியாட்களை அனுப்பி அனுராதாவை மிரட்டியுள்ளார். "மீண்டும் பணத்தை கேட்டால் உன்னையும்,உன் குழந்தைகளையும் கழுத்தை அறுத்து விடுவேன்" என கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

Anuratha

இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அனுராதா தன்னிடம் பணம் பெற்று ஏமாற்றிய காயின்ஸ் பிளஸ் நிறுவனத்தின் உரிமையாளர் வெங்கடேசன் உட்பட மூன்று பேர் மீது தக்க நடவடிக்கை எடுத்து தங்கள் பணத்தை மீட்டு தருமாறு தாம்பரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

மேலும் புகாரில், இவர்கள் தாம்பரம், காஞ்சிபுரம், பட்டினப்பாக்கம், தேனாம்பேட்டை, பரமக்குடி,திருச்சி ஆகிய இடங்களிலும் இதேபோன்று பணத்தை பொதுமக்களிடம் மோசடி செய்துள்ளனர் என அனுராதா தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க | தென்னிந்திய கலைஞர்களை இந்தி திரையுலகம் மதிக்காது - நடிகர் சிரஞ்சீவி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News