பாஜக ஆட்சியின் 10 வருட ரிப்போர்ட் கார்டுடன் மக்களை சந்திக்கிறோம்: வானதி சீனிவாசன்

BJP MLA Vanathi Srinivasan in Election Campaign: 10 வருட காலம் மோடி சாதனையை செய்திருக்கிறார் என்று ரிப்போர்ட் கார்டோடு வந்து மக்களை வந்து சந்திக்கின்றோம் என பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் வட சென்னையில் பரப்புரையில் ஈடுபட்டார்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Apr 8, 2024, 12:47 PM IST
  • திமுக காங்கிரஸ் கூட்டணி காலத்தில் இல்லாத அளவிற்கு பல மடங்கில் அதிகமாக திட்டங்கள் தமிழ்நாட்டுக்கு கொடுத்துள்ளோம்.
  • மழை வெள்ளம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆயிரக்கணக்கான பாஜக கட்சியினுடைய தொண்டர்கள் உதவி செய்தார்கள்.
பாஜக ஆட்சியின் 10 வருட ரிப்போர்ட் கார்டுடன் மக்களை சந்திக்கிறோம்: வானதி சீனிவாசன் title=

BJP MLA Vanathi Srinivasan in Election Campaign: வடசென்னை நாடாளுமன்ற பாஜக வேட்பாளர் பால் கனகராஜ ஆதரித்து வண்ணாரப்பேட்டை எம் சி சாலையில் பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் பரப்புரை மேற்கொண்டார் அப்பொழுது பேசிய அவர், வடசென்னை நீண்டகால கொடுங்கையூர் குப்பை கிடங்கு பிரச்சனை போக்குவரத்து பிரச்சனை அரசனுடைய திட்டங்கள் மக்கள் கொண்டு சேர்ந்து தீர்க்கும் வழக்கறிஞராக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக வேட்பாளர் பால் கனகராஜ் இருக்கிறார் என்றார்.

மேலும், பிரச்சாரத்தில் அவர் பேசியதாவது:

1. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அவர்களை அவசரத்துக்கு எந்த உதவியும் செய்யாத திமுக அரசு எந்த முகத்தோடு உங்களிடம் வாக்கு கேட்க வருகிறார்கள் என்றார் வானதி சீனிவாசன்.

2. பிஜேபிக்கு எம்எல்ஏ கிடையாது, எம்பி கிடையாது, கவுன்சிலர் கிடையாது. ஆனாலும் கூட மழை வெள்ளம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆயிரக்கணக்கான பாஜக கட்சியினுடைய தொண்டர்கள் மக்களுடன் மக்களாக நின்று அவர்களுக்கு உதவி செய்தார்கள்.

3. கமலஹாசன் இந்த கூட்டணியில் நட்சத்திர பேச்சாளராகியுள்ளார். அவரும் அவர் உழைக்கின்ற இந்த கடைசி பேச்சு இந்த கூட்டணி கட்சியின் தோல்வியில் தான் இருக்கும்

4. கச்சத்தீவு கட்சி பிரச்சனை குறித்து பாஜக வரலாற்று சம்பந்தமில்லாமல் சொல்கிறார்கள் என்று கமலஹாசன் கூறியிருக்கிறார். ஷூட்டிங்ல பிஸியா இருந்த கமல் அந்த படம் எத்தனை கோடி என்றார். சூட்டிங்கில் இடையிடையே வந்து வரலாறு படித்தால் இப்படித்தான் இருக்கும். ஷூட்டிங்கில் பிஸியாகி இடையிடையே வந்து வரலாறு படித்தால் இப்படித்தான் தப்பு தப்பாக பேசுவீர்கள் 

 5. கச்சத்தீவு பிரச்சனையில் என்ன வரலாறு இருக்கிறது.... கச்சாத்தீவை பற்றிசம்பந்தமில்லாமல் சொல்கிறார்கள். வரலாற்றை ஒழுங்காக படிக்க வேண்டும்.

மேலும் படிக்க | ’அதிமுகவில் ஒரு சிவாஜி கிருஷ்ணமூர்த்தி’ அமைச்சர் உதயநிதியை ஒருமையில் பேசிய நிர்மலா பெரியசாமி

 6. நீங்கள் கோயம்புத்தூரில் நின்றீர்கள்.. தோல்வி அடைந்துபோனீர்கள்

 7. திராவிட முன்னேற்றக் கழகம் என்ன சொன்னார்கள்... எங்களுக்கு தெரியாமல் கச்சை தீவை காங்கிரஸ் கட்சி கொடுத்துவிட்டது என்றார்ல்கள்... அதாவது முதலமைச்சர் கருணாநிதி அவர்களுக்கு தெரியாமல் இந்திரா காந்தி அம்மையார் கச்சத்தீவை கொடுத்துவிட்டார். இதே பல்லவியை எத்தனை வருஷமா பாடிக் கொண்டிருக்கிறார்கள். 

8. கமலஹாசன் அவர்கள் சினிமா சூட்டிங் வசனத்தில் பேசுவது போல் பேசுகிறார். ஒவ்வொரு நாளும் மக்கள் பிரச்சனையோடு கூடவே இருப்பவர்கள் நாங்கள்... உங்கள மாதிரி ஸ்கிரீன்ல நின்னு வசனம் பெறக்கூடிய ஆள் கிடையாது.

9. யாருக்காக பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறீர்கள்... வாரிசு அரசியல் என்று அன்று டார்ச்சை வைத்து டிவியை உடைத்தவர்கள் நீங்கள் இப்போது வாரிசு அரசியலுக்கு பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறீர்கள்.

10. பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் 10 வருட காலத்தில், மோடி என்ன சாதனையை செய்திருக்கிறார் என்று ரிப்போர்ட் கார்டோடு வந்து மக்களை சந்திக்கின்றோம் 

11. தமிழ்நாட்டுக்கு என்ன செய்திருக்கிறோம்..... திமுக காங்கிரஸ் கூட்டணி காலத்தில் இல்லாத அளவிற்கு பல மடங்கில் அதிகமாக திட்டங்கள் கொடுத்துள்ளோம். மற்ற அரசாங்கத்தினுடைய மாநிலங்களை விட தமிழகத்திற்கு நேரடியாக கொடுத்து உள்ளோம்

12. அப்படிப்பட்ட ஆட்சியின் ரிப்போர்ட் காடர்டோட வந்து பேசுற எங்களை பார்த்து தமிழகத்திற்கு மோடி என்ன செய்கிறார்கள் என்று கேட்கிறார்கள்

13. தமிழகத்திற்கு மோடி செய்தது மட்டுமல்ல வரக்கூடிய காலத்தில் அவர் பிரதமராக வருகின்ற பொழுது, பாஜக வேட்பாளர்கள் தொகுதி மக்களுக்கு இன்னும் நிறைய செய்வார். செய்தது மட்டுமல்ல செய்யப் போவதையும் சொல்லி இவர் தான் பிரதமராக வரப் போகிறார் என்று சொல்லி தாமரைச் சின்னத்திற்கு வெற்றி பெற வேண்டும் என ஓட்டு கேட்கிறார் என்றார் வானதி சீனிவாசன்.

மேலும் படிக்க | வேலூரில் பிரதமர் மோடி கலந்துகொள்ளும் பிரச்சார கூட்டத்திற்கு அனுமதி தந்ததே திமுக அரசு தான்: நடிகை விந்தியா

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News