இந்தியா கூட்டணி கூடும் போதெல்லாம் பயத்தில் இருக்கிறது பாஜக - உதயநிதி

பாஜக அரசு ஆரம்பத்திலிருந்தே ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே மதம், ஒரே மொழி, ஒரே கல்வி என்பதை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். இதை திமுக தொடர்ந்து எதிர்க்கும். இந்தியா கூட்டணி கூடும் போதெல்லாம் பயத்தில் இருக்கிறது பாஜக என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.  

Written by - S.Karthikeyan | Last Updated : Sep 1, 2023, 04:55 PM IST
  • பாஜகவுக்கு இப்போது பயம் வந்துவிட்டது
  • பாஜக ஆட்சியில் இருந்து விரட்டப்படும்
  • அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்
இந்தியா கூட்டணி கூடும் போதெல்லாம் பயத்தில் இருக்கிறது பாஜக - உதயநிதி  title=

தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள் வெல்லும் மாற்றுத்திறனாளி வீரர் வீராங்கனைகளுக்கு உயரிய ஊக்கத்தொகை வழங்கிட அரசாணை பிறப்பித்த முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இதில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விழாவில் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, " தேசிய அளவிலான போட்டிகளில் மாற்றுத்திறனாளி வெற்றி பெற்றால் அவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை தொடங்கியிருக்கிறோம். 

மேலும் படிக்க | சென்னை தினமலர் அலுவலகத்தில் மலம் வீசிய தபெதிக!

அதற்காக மாற்றுத்திறனாளிகள் அரசு நன்றி தெரிவித்து இந்த நிகழ்வை நடத்தியுள்ளனர். இந்த ஆண்டும் 29 பேர் மெடல் வாங்கியுள்ளனர். அவர்களுக்கும் ஊக்கத்தொகை வழங்கப்படும் என அறிவித்திருக்கிறோம். இதற்காகத் தான் Tamilnadu champion foundation என்ற அமைப்பையே தொடங்கினோம். அடுத்த ஆண்டு முதல் விளையாட்டுத்துறை மூலமாகவே தேசிய அளவில் ஜெயித்தவர்களுக்கான ஊக்கத்தொகை வழங்கப்படும். ஒன்றிய பாஜக அரசு ஆரம்பத்திலிருந்தே ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே மதம், ஒரே மொழி, ஒரே கல்வி என்பதைத் தான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். 

இதை திமுக தொடர்ந்து எதிர்க்கும். இந்தியா கூட்டணி கூடும் போதெல்லாம் பயத்தில் இருக்கிறது பாஜக. என்ன செய்வதென்று தெரியாமல் இருக்கிறார்கள். மணிப்பூருக்குப் பிறகு, கர்நாடக தோல்விக்குப் பிறகு, இந்தியா கூட்டணியின் 3 ஆவது கூட்டம் நேற்று மும்பையில் தொடங்கியுள்ளது. பாஜக வை ஒழிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக என்ன முரண்பாடுகள் இருந்தாலும் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதில் அனைவரும் ஒரே கொள்கையாக கூடியிருக்கிறோம். 

அது தான் அவர்களை பயமுறச் செய்திருக்கிறது. எனவே தான் 5 நாட்கள் சிறப்பு பாராளுமன்ற கூட்டத்தையெல்லாம் கூட்டியிருக்கிறார்கள். இதுவரை அப்படிச் செய்ததில்லை. இவையனைத்தும் பாஜகவின் பயத்தின் வெளிப்பாடுதான்" என விமர்சித்தார்.

மேலும் படிக்க | 'சூத்திரனுக்கு எதைக் கொடுத்தாலும்..’ விளாசிய உதயநிதி..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News