உணவு டெலிவரிக்கு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் திட்டம்... சென்னையில் தொடக்கம்!

சுற்றுச்சூழல் மாசுபாட்டை தவிர்க்கும் வகையில், உணவு டெலிவரி நிறுவனங்களுக்கு பிகாஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வழங்கும் திட்டம் சென்னையில் தொடங்கப்பட்டது. 

Written by - Sudharsan G | Last Updated : Nov 28, 2022, 09:04 AM IST
  • சென்னையில் 50 ஸ்கூட்டர்கள் வழங்கப்பட்டுள்ளது.
  • விரைவில் நாடு முழுவதும் இத்திட்டத்தை விரிவுப்படுத்த உள்ளதாக தகவல்.
உணவு டெலிவரிக்கு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் திட்டம்... சென்னையில் தொடக்கம்!  title=

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வணிக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பில் முன்னணி நிறுவனமான பிகாஸ் (BGauss), கோ சாப் (GoZap) நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து உணவு டெலிவரி செய்வதற்கு எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளது. 

இதன்படி, உணவு மற்றும் காய்கறி உள்ளிட்டவற்றை டெலிவரி செய்யும் தனியார்  நிறுவன ஊழியர்களுக்கு எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை ஊக்குவிக்க முடிவு செய்யப்பட்டு முதற்கட்டமாக 50 ஸ்கூட்டர்களை வழங்கியுள்ளது. விரைவில் தமிழ்நாடு முழுவதும் 3 ஆயிரம் ஸ்கூட்டர்களை வழங்க திட்டமிட்டுள்ளது.  

டெலிவரி வழங்கும் ஊழியர்கள் அதிக தொலைவு வாகனம் ஓட்டுவதால், பேட்டரி சார்ஜ் செய்யும் சிக்கலை தவிர்க்க, செயலி ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது. அதில் பேட்டரி சார்ஜ் முடியும் தருவாயில் பதிவிட்டு தகவல் தெரிவித்தால் கோ சாப் நிறுவனம் உடனடியாக பேட்டரியை வழங்கி அவர்களது பணி பாதிக்காமல் பார்த்துக்கொள்ளும்.

மேலும் படிக்க | என்னைய தாண்டி எப்படி போறேன்னு பார்க்கலாம்! வழிமறித்த காட்டு யானை!

இதற்காக சென்னையின் பல்வேறு இடங்களில் கோ சாப் நிறுவனத்தின் கிளைகள் இயங்கி வருகின்றன.  இந்த செயல்பாடு மூலம் சென்னையில் உணவு டெலிவெரிக்காக இயக்கப்படும் வாகனங்களால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசுபாடு பெருமளவில் குறைக்கடும். 

இதுதொடர்பாக பேசிய பிகாஸ் நிறுவனரும், மேலாண் இயக்குநருமான ஹேமந்த் காப்ரா,"உலகத்தரம் வாய்ந்த எலெக்ட்ரானிக் ஸ்கூட்டர்களை உருவாக்குவதோடு, சுற்றுச்சூழல் பாதுகாப்பையும் உறுதி செய்வது தங்களது நோக்கம்" என குறிப்பிட்டார். 

மேலும் பல்வேறு நிறுவனங்களின் பங்களிப்போடு தங்கள் இலக்கை எட்ட முயற்சி மேற்கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார். அதற்காகவே பிகாஸ் நிறுவனம் முழுக்க முழுக்க இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட, தரத்திலும் வடிவமைப்பிலும் மேம்பட்ட மற்றும் அனைத்து பராமரிப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்ட பிகாஸ் ஸ்கூட்டர்களை அறிமுகப்படுத்தி உள்ளதாக தெரிவித்தார். 

கோ ஃபியுவல் (Go Fuel) நிறுவனத்தின் அங்கமான கோ சாப் நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப அதிகாரி முத்துராமன், "எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஓட்டுநர்கள் இனிமேல் பேட்டரி சார்ஜ் குறித்து கவலை கொள்ள தேவையில்லை. எங்களை நாடினால் ஒரு நிமிடத்திற்குள் பேட்டரி மாற்றம் செய்து தரப்படும்" என தெரிவித்தார். தற்போது தமிழ்நாட்டில் தொடங்கப்பட்ட இந்த திட்டம் விரைவில் நாடுமுழுவதும் விரிவுபடுத்தப்படும் என்றும் கூறினார்.

மேலும் படிக்க | உதயநிதி நடந்தால் ஊர்வலம்; உட்கார்ந்தால் பொதுக்கூட்டம் - திமுக அமைச்சர்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News