யூ டியூப்பில் பப்ஜி கேம் விளையாடி பிரபலமான பப்ஜி மதன் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சமூகவலைதளங்களில் ஆபாசமாகவும், அருவருக்கத்தக்க வகையில் பேசியதால், அவர் சர்ச்சையில் சிக்கினார். தமிழகம் முழுவதும் கடுமையான எதிர்ப்புகள் எழுந்ததையடுத்து, காவல்நிலையத்திலும் பப்ஜி மதன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி 150க்கும் மேற்பட்ட புகார்கள் பதிவாகத் தொடங்கியது.
மேலும் படிக்க | PUBG Mobile India நாளை தொடங்கப்படுமா? உண்மை நிலை என்ன?
இதனையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்து, காவல்துறை கைது செய்ய ஆயத்தமானபோது, பப்ஜி மதன் திடீரென தலைமறைவானார். அவர் தலைமறைவான இடம் குறித்து பல்வேறு இடங்களில் தேடுதல் வேட்டை நடத்திய காவல்துறையினர் இறுதியாக தருமபுரி அருகே கைது செய்தனர். அவருடன், யூ டியூப்பில் ஆபாசமாக பேசியதாக அவரது மனைவியும் கைது செய்யப்பட்டார். பப்ஜி மதன் கைது செய்யப்பட்டதற்குப் பிறகு, அவர் மீது பண மோசடி உள்ளிட்ட புகார்களும் காவல்துறைக்கு வந்தது.
மேலும் படிக்க | PUBG Update: பப்ஜி நிறுவனம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு..!!
இது குறித்து விசாரணை நடத்திய காவல்துறையினர் பப்ஜி மதனை குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர். இப்போது சென்னை புழல் சிறையில் இருக்கும் பப்ஜி மதனுக்கு சிறைக்காவல்துறையினர் சொகுசு வசதிகள் செய்து கொடுக்க பேரம் நடத்தியதாக புகார்கள் எழுந்தது. பப்ஜி மதனின் மனைவி கிருத்திகா, சிறைத்துறை அதிகாரி லஞ்சம் கேட்கும் ஆடியோவை ரிலீஸ் செய்ததுடன் காவல்துறையிலும் புகார் அளித்தார். இதுகுறித்து விசாரணை நடத்திய சிறைத்துறை டிஜிபி சுனில்குமார் சிங், ஆடியோ விவகாரத்தில் ஜெயிலர் செல்வத்தை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். தற்போது இதே புகாரில் சிறைத்துறை மருத்துவர் நவீனும் சிக்கியதையடுத்து, அவரை மானாமதுரைக்கு பணியிட மாற்றம் செய்து சிறைத்துறை அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR