ஷாப்பிங் செய்வதில் அதிக ஆர்வமா?அப்போ உங்களுக்கு தான் ஆபத்து! கவனம் தேவை!

அடிக்கடி ஷாப்பிங் செல்வதும், தேவையில்லாததாக இருந்தாலும் ஏதாவது ஒரு பொருளை வாங்கி குவித்துக்கொண்டிருப்பதும் ‘ஷாப்பிங் டிஸ்ஆர்டர்’ எனப்படும் ஒருவகை மனநிலை பாதிப்பிற்கு வழிவகுத்துவிடும். 

Last Updated : Sep 27, 2021, 06:00 PM IST
ஷாப்பிங் செய்வதில் அதிக ஆர்வமா?அப்போ உங்களுக்கு தான் ஆபத்து! கவனம் தேவை! title=

ஷாப்பிங் செல்லவேண்டும் என்றாலே அனைவரும் குஷியாகி விடுவார்கள்.அதிலும் குறிப்பாக பெண்களும், குழந்தைகளும் சொல்லவே வேண்டாம்.வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடப்பவர்களுக்கு வெளியே செல்லும் சந்தர்ப்பத்தை ஷாப்பிங் ஏற்படுத்தி கொடுப்பதால் குதூகலமாகிவிடுகிறார்கள்.  மனதுக்கு பிடித்தமானதை வாங்க போகிறோம் என்பதால் உற்சாகமும், புத்துணர்ச்சியும் கிளர்ந்தெழும். ஆனால் அடிக்கடி ஷாப்பிங் செல்வதும், தேவையில்லாததாக இருந்தாலும் ஏதாவது ஒரு பொருளை வாங்கி குவித்துக்கொண்டிருப்பதும் ‘ஷாப்பிங் டிஸ்ஆர்டர்’ எனப்படும் ஒருவகை மனநிலை பாதிப்பிற்கு வழிவகுத்துவிடும். அது மட்டுமின்றி தேவையற்ற ஷாப்பிங்கால் ஏராளமான பொருள் இழப்பும் உருவாகிவிடும்.

பொருட்களை வாங்கிக் குவித்துகொண்டே இருப்பவர்கள் ஷாப்பிங்குக்கு அடிமையாகிவிடுவார்கள். அப்படிப்பட்டவர்கள் பணம் பற்றி சிந்திக்காமல் செலவளித்துக்கொண்டே இருப்பார்கள்.  ஷாப்பிங் அவர்களுக்கு பணத்தை இழக்கும் பொழுதுபோக்காக மாறிவிடும். தொடக்கத்திலேயே அவர்களது மனநிலையை சீராக்காவிட்டால், அவர்களை இயல்பு நிலைக்கு கொண்டு வருவது மிக கடினமான ஒன்றாகிவிடும்.

sho

இது பற்றி லக்னோவை சேர்ந்த மனநல நிபுணர் நானுசிங் கூறுகையில்,‘‘ஒரு நபர் ஷாப்பிங் செல்வதற்கு பல காரணங்கள் இருக்கலாம். சிலர் ஒரே இடத்திலேயே எல்லா பொருட்களையும் வாங்கும் பழக்கத்தை கொண்டிருக்கிறார்கள்.  அப்படிப்பட்டவர்கள் அடிக்கடி குறிப்பிட்ட கடை அல்லது சந்தைக்கு செல்லலாம். அது பிரச்சினைக்குரியதல்ல. தேவை அறிந்து பொருட்களை வாங்குவது வேறு. அவசியமற்ற பொருட்களை அள்ளிக்கொண்டு வருவது வேறு. இரண்டுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது.  ஆண், பெண் இருபாலருமே ஷாப்பிங்கில் ஆர்வம் காட்டுகிறார்கள். ஆனால் ஒப்பீட்டளவில் பெண்கள்தான் ஷாப்பிங் கோளாறு பிரச்சினையை அதிகம் எதிர்கொள்ள வாய்ப்பிருக்கிறது.

அதற்கு குறிப்பிட்ட தயாரிப்பு பொருட்கள் மீது அலாதி பிரியம் கொள்வது காரணமாக இருக்கலாம். அதனை அவசியமின்றி அடிக்கடி வாங்கிக்கொண்டே இருப்பார்கள். இந்த சுபாவம் மன நலத்தை மோசமாக பாதிக்கும்’’ என்கிறார்.   ஷாப்பிங்குக்கு அடிமையாகி இருப்பவர்களை கண்டறிய பின்வ்ரும் இந்த குணாதிசயங்கள் உதவும்...

* ஏதாவது ஒரு பொருளை வாங்கிக்கொண்டே இருக்கவேண்டும் என்ற வேகம் அவர்களிடம் காணப்படும்.

* ஷாப்பிங் செய்த சிறிது நேரத்திற்கு, மனஅழுத்தத்தில் இருந்து விடுபட்ட மகிழ்ச்சி தோன்றும்.

* கிரடிட் கார்டு வைத்திருப்பவர்களாக இருந்தால் ஏற்கனவே வாங்கிய பொருட்களுக்கு பில் தொகை செலுத்தாமல் இருப்பார்கள். அல்லது கார்டில் நிர்ணயிக்கப்பட்ட தொகைக்கு பொருட்களை வாங்கி குவித்திருப்பார்கள். ஆனாலும் புதிதாக என்ன பொருள் வாங்கலாம்..??? என்று யோசித்துக்கொண்டே இருப்பார்கள்.

* பிடித்தமான பொருட்களை வாங்கும்போது மற்றவர்களை விட அதிகப்படியான உற்சாகத்தை வெளிப்படுத்துவார்கள்.

* தேவையற்ற பொருட்களை வாங்கும்போதும் அதைப்பற்றி கவலைப்பட மாட்டார்கள். எந்த பொருள் பிடித்துவிட்டாலும் அதை வாங்கியே தீர வேண்டும் என்று முரட்டு பிடிவாதம் பிடிப்பார்கள்.

* ஷாப்பிங் செல்வதற்கு தேவையான பணம் இல்லா விட்டால், மற்றவர்களிடம் கடன் வாங்குவதற்கு கூட தயங்க மாட்டார்கள். அதே சமயம் வாங்கிய தொகையை திருப்பி கொடுப்பதற்கு ஆர்வம் காட்டமாட்டார்கள்.

* மனவருத்தம் தரக்கூடிய ஏதாவதொரு பிரச் சினையை சந்தித்திருந்தால் அதில் இருந்து மீள்வதற்காகவோ, அதை மறப்பதற்காகவோ ஷாப்பிங் செல்வார்கள்.

* ஏற்கனவே ஒரு தொகையை நிர்ணயித்துவிட்டு ஷாப்பிங் செய்ய சென்றிருந்தாலும், பட்ஜெட்டை மீறி தாராளமாக செலவு செய்துவிட்டு கையை பிசைந்துகொண்டிருப்பார்கள்.

ALSO READ ₹6 லட்சம் மதிப்பிலான ப்ளூடூத் செருப்பு; வசூல் ராஜா MBBS பாணியில் ஹைடெக் காப்பி.!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News