TNPSC குரூப் IV தேர்வு முறைகேடு: மேலும் ஒருவர் CBCID பிரிவினர் கைது செய்துள்ளனர்!

TNPSC குரூப் 4 தேர்வு முறைகேடு தொடர்பாக, டிபிஐ-யில் ஆவண கிளார்க்காக பணிபுரிந்து வரும் ஓம்காந்தன் என்பவரை சிபிசிஐடி போலீசார் கைது  செய்துள்ளனர்!!

Last Updated : Jan 26, 2020, 11:55 AM IST
TNPSC குரூப் IV தேர்வு முறைகேடு: மேலும் ஒருவர் CBCID பிரிவினர் கைது செய்துள்ளனர்! title=

TNPSC குரூப் 4 தேர்வு முறைகேடு தொடர்பாக, டிபிஐ-யில் ஆவண கிளார்க்காக பணிபுரிந்து வரும் ஓம்காந்தன் என்பவரை சிபிசிஐடி போலீசார் கைது  செய்துள்ளனர்!!

சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) கடந்த செப்., 1 ஆம் தேதி நடத்திய குரூப்-4 தோ்வில் முறைகேடாக தோ்ச்சி பெற்ற 99 பேருக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 1 ஆம் தேதி TNPSC குரூப் 4 தேர்வு நடைபெற்றது. இதற்கான தரவரிசை பட்டியல் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வெளியிடப்பட்டது. அதில் முதல் 100 இடங்களுக்குள் இடம்பிடித்து இருந்தவர்களில் 40 பேர் ராமநாதபுரம் மாவட்டத்திற்குட்பட்ட ராமேஸ்வரம், கீழக்கரை தேர்வு மையங்களில் தேர்வு எழுதியவர்கள். அவர்களில் பலர் பிற மாவட்டங்களை சேர்ந்தவர்களாக  இருந்ததால், மற்ற தேர்வர்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரர்களை அழைத்து TNPSC அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

அதன் பிறகு இந்த முறைகேடு தொடர்பாக DGPபி திரிபாதியிடம் TNPSC புகார் அளித்தது. இந்த புகாரை CBCID போலீசாருக்கு DGP திரிபாதி அனுப்பி வைத்தார். அதன்படி CBCID போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது. அதில், முதல் கட்டமாக ராமேஸ்வரம், கீழக்கரை மையங்களில் இடைத்தரகர்கள் உதவியுடன் 99 பேர் குரூப்-4 தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டதை உறுதி செய்து. எனவே, 99 தேர்வர்களும் தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 

இதையடுத்து, குரூப் 4 முறைகேட்டில் சென்னை டிபிஐ-யில் பணியாற்றும் ஓம்காந்தன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். தேர்வு தாள்களை மாற்றி முறைகேட்டிற்கு உதவியதாக சிபிசிஐடி காவல்துறையினர் அவரை கைது செய்துள்ளனர். 

சாப்பிடுவதற்காக வேனை நிறுத்தியபோது தேர்வு தாள்களை மாற்றி முறைகேட்டில் ஈடுபட்டது அம்பலமாகி உள்ளது. எழும்பூர் சிபிசிஐடி அலுவலகத்தில் ஓம்காந்தனிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் அவரது வீட்டிலும் சிபிசிஐடி போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். டிபிஐ ஆவண கிளார்க்கான ஓம்காந்தன் தேர்வு தாள்களை கொண்டு செல்லும் பணியில் ஈடுபட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. 2016 ஆம் ஆண்டு முதல் தேர்வுத் தாள்களை கொண்டும் செல்லும் பணியை ஓம்காந்தன் செய்து வந்தார். 

 

Trending News