ஆண்டாள் சர்ச்சை! வைரமுத்து மீதான வழக்கு விசாரிக்க ஐகோர்ட் தடை

கவிஞர் வைரமுத்து ஆண்டாள் குறித்து பேசியதில் தவறு ஏதுவும் இல்லை எனக் கூறி, வைரமுத்து மீதான வழக்குகளுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது சென்னை உயர்நீதிமன்றம்

Last Updated : Jan 19, 2018, 03:33 PM IST
ஆண்டாள் சர்ச்சை! வைரமுத்து மீதான வழக்கு விசாரிக்க ஐகோர்ட் தடை title=

ஸ்ரீவில்லிப்புத்தூரில் 'தமிழை ஆண்டாள்' என்ற தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது. அதில் பேசிய கவிஞர் வைரமுத்து, ஆண்டாள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து கூறியதாக விமர்சனம் எழுந்தது. இது தமிழகம் முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

கவிஞர் வைரமுத்துவின் கருத்துக்கு பல்வேறு இந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்ததோடு, அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர். இதனையடுத்து, கவிஞர் வைரமுத்துவி ஆண்டாள் குறித்து கருத்துக்கு விளக்கம் அளித்ததுடன், வருத்தமும் தெரிவித்துள்ளார். ஆனாலும், அவர் மீதான விமர்சனங்கள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளன. 

தமிழகத்தில் பல இடங்களில் கவிஞர் வைரமுத்துவுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து, தன் மீதான அனைத்து வழக்கையும் ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வைரமுத்து மனுத்தாக்கல் செய்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. 

இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், வைரமுத்து கூறிய கருத்தில் தவறில்லை எனவும், மேலும் அவர் கூறிய கருத்து சொந்தகருத்தல்ல எனவும், தேவையில்லாமல் இந்த சம்பவத்தை அரசியல் ஆக்காதீர்கள் எனதரும், ஆண்டாள் குறித்து வைரமுத்து பேசியதை பெரிது படுத்த வேண்டாம் எனக் கூறி வைரமுத்து மீதான வழக்குகளுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார் 

Trending News