கலைஞர் மகளிர் உரிமை தொகை: இன்று முதல் இல்லத்தரசிகள் செய்ய வேண்டியது என்ன?

Kalaignar Magalir Urimai Thogai: கலைஞர் மகளிர் உரிமை தொகைக்கான விண்ணப்பம் பதிவு சிறப்பு முகாமை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று (ஜூலை 24) தர்மபுரியில் தொடங்கிவைக்கிறார். 

Written by - Sudharsan G | Last Updated : Jul 24, 2023, 11:50 AM IST
  • தமிழ்நாடு முழுவதும் இரண்டு கட்டங்களாக சிறப்பு முகாம்கள் நடக்கின்றன.
  • கலைஞர் மகளிர் உரிமை தொகை செப். 15ஆம் தேதி அன்று செயல்படுத்தப்படும்.
  • இதில், நேரடியாக வங்கி கணக்கில் மாதந்தோறும் ரூ. 1000 வழங்கப்படும்.
கலைஞர் மகளிர் உரிமை தொகை: இன்று முதல் இல்லத்தரசிகள் செய்ய வேண்டியது என்ன? title=

Kalaignar Magalir Urimai Thogai: 2021ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் அறிக்கையில், திமுக ஆட்சிக்கு வந்தால் இல்லத்தரசிகளுக்கு மாதம் 1000 ரூபாய் உரிமைத்தொகையாக வழங்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டது. இதையடுத்து, 2021ஆம் ஆண்டில் ஆட்சிக்கட்டிலில் ஏறிய திமுக இத்திட்டம் குறித்து நீண்ட நாள்களாக ஆலோசனையில் இருந்தது. 

இதையடுத்து, இத்திட்டம் முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் பிறந்தநாளான செப். 15ஆம் தேதி அன்று செயல்படுத்தப்படும் என 2023-24 பட்ஜெட்டின்போது அறிவிக்கப்பட்டது. மேலும், இத்திட்டத்திற்கு 7 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டது. தொடர்ந்து, இந்த திட்டத்தின் செயல்படுத்த சிறப்பு அதிகாரியாக இளம்பகவத் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டார். 

விண்ணப்பங்கள் வழங்கல்

இத்திட்டத்தை அமல்படுத்த இன்னும் இரண்டு மாதங்களுக்கும் குறைவான நாள்களே இருப்பதால் இதற்கான பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அந்த வகையில், சட்டப்பேரவையில் தெரிவிக்கப்பட்டதுபோல், மாதம் 1000 ரூபாய் வாங்க தகுதிவாய்ந்த பெண்களுக்கான விதிமுறைகளை அரசு வெளியிட்டது. மேலும், இத்திட்டத்திற்கு 'கலைஞர் மகளிர் உரிமைத் தொகை' என பெயர் வைக்கப்பட்டது. 

ஆண்டு வருமானம், நில உரிமை போன்ற பல்வேறு தகுதிகள் வரையறுக்கப்பட்ட நிலையில், இத்திட்டத்திற்கு விண்ணப்பம் அளிக்க சிறப்பு முகாம்களை நடத்த தமிழ்நாடு அரசு முடிவெடுத்தது. உரிமைத் தொகை வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கான சிறப்பு முகாம்களை ரேசன் கடைகள் மூலம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், வீடு தேடி வந்து விண்ணப்பங்கள் வழங்கவும், ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | கலைஞர் உரிமைத் தொகை: திருமணம் ஆகாத பெண்கள், திருநங்கைகள் விண்ணப்பிக்கலாம் - முழு விவரம் இதோ

இரண்டு கட்டமாக சிறப்பு முகாம்

தமிழ்நாடு முழுவதும் இரண்டு கட்டங்களாக இந்த சிறப்பு முகாம்கள் நடக்கின்றன. இன்று தொடங்கும் முதற்கட்ட சிறப்பு முகாம்கள் வரும் ஆக. 4ஆம் தேதி வரை நடக்கிறது. அதன்பின், ஆக். 5ஆம் தேதி தொடங்கும் இரண்டாம் கட்ட சிறப்பு முகாம்கள் ஆக. 16ஆம் தேதி வரை நடைபெறுகிறது.  முதலமைச்சர் ஸ்டாலின் இன்று (ஜூலை 24) தர்மபுரியில் விண்ணப்பம் பதிவு செய்யும் சிறப்பு முகாமை தொடங்கிவைக்கிறார். 

செப். 15ஆம் தேதி முதல் இத்திட்டம் தொடங்கப்பட உள்ள நிலையில், நேரடியாக வங்கி கணக்கில் மாதந்தோறும் ரூ. 1000 உரிமைத் தொகை செலுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கி கணக்கு இல்லாத பயனாளிகளுக்கு இந்த சிறப்பு முகாமிலேயே கணக்கு திறக்க ஏற்பாடுகள் செய்யப்படும் என கூறப்படுகிறது. 

யார் யாருக்கு உரிமைத் தொகை?

ஆண்டு வருமானம் ரூ. 2.5 லட்சத்திற்கும் மேல் இருப்பவர்களுக்கு, கார் மற்றும் 5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்திருப்பவர்களுக்கு இந்த உரிமைத் தொகை வழங்கப்படாது. மேலும், அரசு அதிகாரிகள், எம்எல்ஏ, எம்பிகள் உள்ளிட்டோருக்கும் இது வழங்கப்படாது. ஒரு ரேசன் அட்டையில் 'தகுதி வாய்ந்த' பல குடும்ப தலைவிகள் இருந்தாலும், அதில் ஒரே ஒருவருக்கு மட்டுமே உரிமைத் தொகை வழங்கப்படும். குடும்ப தலைவராக ஒரு ஆண் இருந்தால், அவரின் மனைவிக்கு உரிமைத் தொகை வழங்கப்படும். அதுமட்டுமின்றி, திருமணமாகாத இல்லதரசிகளுக்கும், திருநங்கைகளுக்கும் இது பயனளிக்கும். எனவே, உங்கள் ரேசன் அட்டை உள்ள ரேசன் கடைகளுக்கு சென்று உரிமைத் தொகை விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளலாம்.    

திட்டம் குறித்த சந்தேகமா?

என்னென்ன அளவுகோல்கள் உள்ளிட்டவை குறித்து ஏதேனும் சந்தேகம் இருந்தால் அது குறித்து அறிந்துக்கொள்ள சிறப்பு தொலைப்பேசி எண்களும் அரசு தரப்பில் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி தொலைபேசி எண் 044-25619208, வாட்ஸ் அப் எண் 9445477205, அழைப்பு மையம் எண் 1913 என அறிவிக்கப்பட்டுள்ளன. இது தவிர மண்டல வாரியாகவும் எண்கள் வெளியிடப்பட்டுள்ளன.

மண்டலம்1 - 9445190201, மண்டலம் 2 - 044-25941079, மண்டலம் 3 - 9445190203, மண்டலம் 4 - 9445190204, மண்டலம் 5 - 9445190205, மண்டலம் 6 - 9445190206/9445190926, மண்டலம் 7 - 9445190207/044-26257880, மண்டலம் 8 - 9445190208, மண்டலம் 9 - 9445190209, மண்டலம் 10 - 9445190210, மண்டலம் 11 - 9445191432, மண்டலம் 12 - 9445190212, மண்டலம் 13 - 9445190213, மண்டலம் 14 - 9445190214, மண்டலம் 15 - 9445190215 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம்

மேலும் படிக்க | கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம்! விண்ணப்பிப்பது எப்படி?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News