துணிவு படம் வெற்றி பெறுவதற்காக அஜித்துக்கு சிலை வைத்த ரசிகர்

துணிவு படம் வெற்றி பெறுவதற்காக தேனியில் அஜித்துக்காக சிலை வைத்த ரசிகரின் புகைப்படம் வைரலாகியுள்ளது.   

Written by - S.Karthikeyan | Last Updated : Dec 11, 2022, 11:19 PM IST
  • அஜித்துக்கு சிலை வைத்த ரசிகர்
  • துணிவு படம் வெற்றி பெற வாழ்த்து
  • உணவகத்துக்கு படையெடுத்த அஜித் ரசிகர்கள்
துணிவு படம் வெற்றி பெறுவதற்காக அஜித்துக்கு சிலை வைத்த ரசிகர்  title=

தேனி மாவட்டம் சின்னமனூரைச் சார்ந்தவர் காளிதாஸ். இவர் அஜித்தின் தீவிர ரசிகர். அஜித் மீது தீராத பற்றின் காரணமாக அவர் புதிதாக தொடங்கப்பட்ட உணவகத்துக்கு வீரம்   ரெஸ்டாரன்ட்  என பெயர் சூட்டி நடத்தி வருகிறார். அஜித்தின் தீவிர ரசிகரான காளிதாஸ் நடிகர் அஜித்குமாரின் பிறந்தநாள் மற்றும் அவரது திரைப்படம் ட்ரெய்லர் வெளியீடு, ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு, திரைப்படம் வெளியீடு உள்ளிட்ட நாட்களில் சின்னமனூர் பகுதியில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கி வருகிறார். அத்துடன் அவரது உணவகத்தில் சலுகைகளையும் வழங்கி வருகிறார்.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு துணிவு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானதை கொண்டாடும் விதமாக தனது உணவகத்தில் பழைய பத்து ரூபாய் நோட்டுக்கு பிரியாணி வழங்கினார். அஜித்தின் துணிவு படம் ஃபர்ஸ்ட் லுக் வெளியிட்டில் பத்து ரூபாய் இருந்ததால் இந்த சலுகையை அவர் வழங்கியுள்ளார். அதேபோன்று அஜித்தின் பிறந்தநாள் மே ஒன்றாம் தேதி அன்று தனது உணவகத்தில் டீ அருந்தும் அனைவருக்கும் ஒரு ரூபாய்க்கு டீ வழங்கினார். அதற்கடுத்து துணிவு படத்தின் ஜில்லா ஜில்லா பாடல் வெளியானதை தொடர்ந்து துணிவு படம் வெற்றி பெறுவதற்காகவும் வீரம் உணவகத்தின் இரண்டாவது கிளையை இன்று அவர் தொடங்கினார் .

மேலும் படிக்க | ஏன் இளம் வயதிலேயே விவாகரத்து செய்தேன்? காயத்திரி ரகுராம் பதில்!

இந்த இரண்டாவது கிளையில் அஜித்தின் ஆறடி உயர சிலையை ரசிகர்களின் பார்வைக்காகவும், தான் அஜித் மேல் வைத்துள்ள பற்றை வெளிக்காட்டும் விதமாகவும் அஜித் திருஉருவ சிலையை திறந்து வைத்தார். இவ்விழாவிற்கு வந்த ஏராளமான அஜித் ரசிகர்கள் அந்த திரு உருவ சிலை உடன் செல்பி புகைப்படங்கள் எடுத்து மகிழ்ந்தனர்.

மேலும் அஜித்தின் 61 வது படமான துணிவு படத்தை வரவேற்கும் விதமாக அஜித்தின் உருவம் அச்சிடப்பட்ட டீ சர்ட்டுகளை 61 நபர்களுக்கு வழங்கினார். மேலும் இன்று அவர் கடையில் வடை, டீ புரோட்டா உள்ளிட்ட பொருட்கள் ரூபாய் இரண்டிற்கு வழங்கி வருகிறார். தென் தமிழகத்தில் நடிகர் அஜித்குமார் அவர்களுக்கு முதல்முறையாக திரு உருவச்சிலை திறக்கப்பட்டுள்ளது இப்பகுதி அஜித் ரசிகர்களுடைய பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க | விஜய் கொடுத்த சர்ப்ரைஸ் கிஃப்ட் - யோகிபாபு நெகிழ்ச்சி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News