TN Lok Sabha Election 2024: வேலூரில் திமுக வேட்பாளரிடம் சரமாரி கேள்வி

வேலூரில் திமுக வேட்பாளர் பிரச்சாரத்தின் போது ஐந்தாண்டுகளாக வரவில்லை ஏன் இப்போது வருகிறீர்கள் என ஒருவர் திடீரென கேள்வி கேட்டதால் ஏற்பட்ட வாக்குவாதத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Apr 1, 2024, 02:48 PM IST
  • வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் போட்டியிடுகிறார்.
  • வேட்பாளரிடம் சரமாரி கேள்வி.
TN Lok Sabha Election 2024: வேலூரில் திமுக வேட்பாளரிடம் சரமாரி கேள்வி title=

வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் இந்தியா கூட்டணி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வேலூர் மாநகருக்கு உட்பட்ட பெரும்புகை, ரங்காபுரம்,வள்ளலார்,சத்துவாச்சாரி, ஆகிய பகுதிகளில் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வந்தார் அப்போது சத்துவாச்சாரியில் பகுதியில் உள்ள 27 வது வார்டில் ஆர்டிஓ சாலையில் திமுக நிர்வாகிகள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருக்கும் போது திடீரென சாலை ஓரம் நின்று கொண்டிருந்த ஒருவர், நீங்கள் எதற்கு இப்போ வருகிறீர்கள் இத்தனை நாளாக எங்கே போனீர்கள்?

ஐந்து வருடத்திற்கு ஒருமுறை கும்பிடு போட்டு வரிங்களே தவிர எந்த ஒரு நல்ல திட்டமும் செய்வதில்லை, அப்போ எதுக்கு ஓட்டு உங்களுக்கு ஏழையின் சின்னம் உதயசூரியன் என சொல்றீங்களே நீங்க பணக்காரராகவும் ஓட்டு போட்ட நாங்க ஏழையாகவும் இருந்து வருகிறோம்.

கட்சிக்காரர்கள் நல்லா உழைக்கிறார்கள் அம்மா ஐயா என கால்களில் விழுகிறார்கள், தோசை, இட்லி, வடை, பூரி என எல்லாம் சுடுகிறார்கள். எங்கள் வாழ்வாதாரமே வீணாக போய்விட்டது.

திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் சொல்றாரு ஆயிரம் ரூபாய் கொடுக்கப்பட்டதால் தான் பெண்கள் பாண்ட்ஸ் பவுடர், ஃபேரல் லவ்லி போட்டு பல பலன்னு இருக்கீங்கன்னு சொல்றாரு அந்த ஆயிரம் ரூபாய் பெரிய விஷயம் அல்ல, வாழ்வாதாரத்தை முன்னுக்குக் கொண்டு வர வேண்டும் அதுதான் பெரிய விஷயம் எனவும், அதுமட்டுமில்லாமல் எங்கள் தொகுதிக்கு நீங்கள் என்ன செய்தீர்கள், என்னோட உரிமையை நான் கேட்கிறேன். பதில் சொல்லுங்கள் பதில் சொல்லாமல் சென்றால் எப்படி என ஆவேசுடன் பேசியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு காணப்பட்டது 

மேலும் படிக்க | சின்னம் பார்த்து வாக்களிக்காதீர்கள் - பாமக வேட்பாளர் தங்கர் பச்சான் வேண்டுகோள்!

அதற்கு திமுக கட்சியினர், அவர் நாம் தமிழர் கட்சியில் இருக்கிறார் எங்களை தவறாக கூறுவதை நிறுத்துங்கள் எனவும், நீங்கள் உங்கள் இயக்கத்தோடு வாக்கு சேகரித்து போராடுங்கள் எனவும் இதைப் போன்று ரோட்டில் வந்து பேசுவது சரி இல்லை என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அதற்கு அவர் நான் நாம் தமிழர் கட்சியில் தற்போது இல்லை எனவும் நான் கட்சியில் இருந்து விலகி இருப்பதாகவும் நான் என்னோடு சொந்த உரிமையை கேட்கிறேன் என சுரேஷ்குமார் கூறினார்.

மேலும் படிக்க | பாஜகவில் இருந்து விலக அந்த 3 பேர் தான் காரணம்! அதிமுகவில் இணைந்த தடா பெரியசாமி குற்றச்சாட்டு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News