ஜல்லிக்கட்டு போராட்டம் மூலம் சமூக வலைதளங்களில் வீர தமிழச்சி என்று பெயர் பெற்ற ஜூலி, பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு பிரபலமானார்.
தற்போது மருத்துவப் படிப்பில் சேர முடியாமல் போனதற்காக கடந்த வருடம் தற்கொலை செய்துகொண்ட மாணவி அனிதாவின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகும் படத்தில் இவர் நடித்து வருகிறார். அனிதா வேடத்தில் ஜூலி நடிக்கவுள்ளார். Dr.S. அனிதா MBBS என இப்படத்துக்குப் பெயரிடப்பட்டுள்ளது. இதைத்தவிர இவர் உத்தமி என்கிற படத்திலும் கதாநாயகியாக நடிக்க உள்ளார்.
இந்நிலையில் இவர் தனது டிவிட்டர் தளத்தில் புதிய விடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,
எக்கச்சக்கமான அரசியல் மாற்றங்கள் தமிழகத்தில் நடந்துகொண்டு வருகிறது. நம் விவசாயிகளுக்கான வாழ்வாதாரம், நீட் தேர்வுக்கான எதிர்ப்புகள், காவிரிக்கான தேவைகள் என நிறைய உள்ளன. நம் மண் மீது எனக்கும் பெரிய பொறுப்பு உள்ளது. என்னுடைய மக்களுக்காக நான் என்ன செய்யப் போகிறேன்? தொடரப்போகிறேன்!! என தான் அடுத்துச் சொன்ன வார்த்தையின் சவுண்டை நீக்கி விடியோவை வெளியிட்டுள்ளார்.
ஒரு மாற்றம் வரும்#tamilnadu pic.twitter.com/uMQARCKRbe
— maria juliana (@lianajohn28) May 9, 2018