தமிழ்நாடு அரசு மற்றும் சர்வதேச சதுரங்க கூட்டமைப்பு இணைந்து நடத்தும் 44- வது செஸ் ஒலிம்பியாட் போட்டி மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ளது. இது தொடர்பான நிகழ்ச்சி கிண்டியில் உள்ள தனியார் விடுதியொன்றில் நடைபெற்றது. இதில், தலைமைச் செயலாளர் இறையன்பு,அகில இந்திய சதுரங்க கூட்டமைப்பு தலைவர் சஞ்சய் கபூர்,போட்டியின் இயக்குனர் பரத் சிங் சவுகான் ஆகியோர் பங்கேற்றனர்.
அப்போது இது தொடர்பாக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பேசிய காணொலி காட்சிஒளிபரப்பப்பட்டது. அதில் பேசிய முதலமைச்சர், 44வது செஸ் ஒலிம்பியாட் தமிழகத்தில் நடப்பது பெருமையளிப்பதாக கூறினார். மேலும், உலகின் தலை சிறந்த செஸ் விளையாட்டு வீரர்களை தமிழ்நாடு உருவாக்கி வருகிறது என குறிப்பிட்ட அவர், தமிழக அரசு உலக செஸ் போட்டியை சிறப்பாக நடத்த அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளதாக குறிப்பிட்டார்.
அவரை தொடர்ந்து பேசிய தலைமை செயலாளர் இறையன்பு, தமிழ்நாடு அரசு இந்திய செஸ் கூட்டமைப்புடன் சேர்ந்து 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை நடத்துகிறது. வரலாற்று சிறப்பு மிக்க இடமான மாமல்லபுரத்தில் இந்த போட்டி நடைபெற உள்ளது.இந்த போட்டியில் 2,000 வீரர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை நடந்த 43 போட்டிகளை விட இந்த 44வது போட்டி மிக சிறப்பானதாக இருக்கும் என்ற உறுதியை தமிழ்நாடு அரசு வழங்கியுள்ளது. இவ்வாறு கூறினார்.
தொடர்ந்து அகில இந்திய சதுரங்க கூட்டமைப்பு தலைவர் சஞ்சய் கபூர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, இந்தியாவில் செஸ் விளையாட்டுக்கு பெயர்போன தமிழ்நாட்டின் சென்னையில் இந்த போட்டி நடக்கிறது பெருமை அளிக்கிறது. மிக குறுகிய காலத்தில் இப்போட்டிக்கான அனுமதியை வழங்கி ஏற்பாடுகளை செய்து வரும் முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன்.
செஸ் விளையாட்டில் மிக சிறந்த திறமை இந்தியாவில் உள்ளது. இந்த போட்டியை சிறப்பாக நடத்துவோம். இந்தியாவின் எல்லா வீடுகளிலும் எல்லா குழந்தைகளும் செஸ் விளையாட வேண்டும் என்பதுதான் கனவு எனக்கூறினார். மேலும், ஜூலை இறுதி முதல் ஆகஸ்ட் மாதம் வரை இந்த போட்டி நடக்க வாய்ப்புள்ளது எனவும், தோராயமாக 100 கோடி செலவில் இப்போட்டி நடத்தப்படவுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR