இலங்கை கடற்படையினரின் தொடரும் அட்டூழியம்: 4 மீனவர்கள் சிறைபிடிப்பு

Last Updated : Jun 2, 2016, 12:39 PM IST
இலங்கை கடற்படையினரின் தொடரும் அட்டூழியம்: 4 மீனவர்கள் சிறைபிடிப்பு title=

தமிழக கடல்பகுதியில் மீன்பிடிக்கச் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. இத்தடை 29-ம் தேதியுடன் முடிவடைந்தது. மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.

கடலுக்கு சென்ற முதல்நாளே ராமேசுவரம் சேர்ந்த ஏழு மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துச் சென்றனர். தற்போது இரண்டாவது முறையாக கடலுக்கு சென்ற கோட்டைப்பட்டினம் சேர்ந்த நான்கு மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துச் சென்றுள்ளனர். 

அவர்களின் பெயர்கள் பின்வருமாறு:-
மணி
பாலா
தியாகு
சந்திரன் ஆகிய இவர்களை இந்திய எல்லைக்குள் அத்து மீறி ரோந்து கப்பளில் வந்த இலங்கை கடற்படையினர் தியாகுவின் விசைப்படகை சுற்றி வளைத்து, படகையும் நான்கு மீனவர்களையும் சிறைபிடித்தனர்.  அதன்பிறகு நான்கு மீனவர்களையும் இலங்கையில் உள்ள காங்கேசன்துறை கடற்படை தளத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்ந்து  தமிழக மீனவர்கள் சிறைபிடிக்கப்படுவதால் மீனவர்கள் தொழிலுக்கு செல்லவே அச்சப்படும் நிலை உருவாகி உள்ளது. இந்த விசியத்தில் மத்திய-மாநில அரசுகள் உடனடியாக    தலையிட்டு மீனவர்கள் நிம்மதியாக மீன்பிடிக்க வழிவகை செய்ய வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Trending News