2019 மக்களவைத் தேர்தல்: ADMK-வுடன் BJP கூட்டணி அமைக்க வாய்ப்பு - பியூஷ் கோயல்

தமிழகத்தில் அதிமுகவுடன் பா.ஜ.க கூட்டணி அமைக்கும் வாய்ப்பு உள்ளதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்!

Last Updated : Feb 15, 2019, 06:53 AM IST
2019 மக்களவைத் தேர்தல்: ADMK-வுடன் BJP கூட்டணி அமைக்க வாய்ப்பு - பியூஷ் கோயல் title=

தமிழகத்தில் அதிமுகவுடன் பா.ஜ.க கூட்டணி அமைக்கும் வாய்ப்பு உள்ளதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்!

சென்னை வந்த பியூஸ் கோயலை, மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக பாஜக தலைவர் தமிழிசை உள்ளிட்டோர் விமான நிலையத்தில் வரவேற்றனர். அப்போது, விமான நிலையத்திலேயே தமிழக பாஜக தலைவர்களுடன் பியூஸ் கோயல் சில நிமிடங்கள் ஆலோசனை நடத்தினார். சுமார் 40 நிமிடங்களுக்கும் மேலாக பியூஷ் கோயல்-அமைச்சர் தங்கமணி சந்திப்பு நீடித்து வந்துள்ளது. 

இதையடுத்து, சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் தமிழகத்தில் அதிமுகவுடன் பா.ஜ.க கூட்டணி அமைக்கும் வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளார். பா.ஜ.க.வின் தமிழக தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளதற்கு மகிழ்ச்சி தெரிவித்த அவர், கூட்டணி பேச்சுவார்த்தைக்காக தாம் வந்துள்ளதாக குறிப்பிட்டார்.

தமிழக மக்கள் மீது பிரதமர் மோடி அக்கறை கொண்டுள்ளதாக கூறிய அவர், மக்கள் நலனுக்கு உகந்த கூட்டணி அமைக்கப்படும் என்றார். மத்தியில் அடுத்த அமையும் ஆட்சியில் தமிழகத்தின் குரல் வலுவாக ஒலிக்கும் வகையிலும், தமிழகத்திற்கு அமைச்சரவையில் கூடுதல் பிரதிநிதித்துவம் தரும் வகையிலும் பா.ஜ.க. நடவடிக்கை எடுக்குமென பியூஷ் கோயல் தெரிவித்தார்.

இதனையடுத்து சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தொழிலதிபர் பொள்ளாச்சி மகாலிங்கம் இல்லத்திற்கு கோயல் சென்றார். அங்கு அமைச்சர் தங்கமணியும் சென்றார். இருவரும் தேர்தல் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக தெரிகிறது. இந்த ஆலோசனையில் எஸ்.பி.வேலுமணி, கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம், ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோர் பங்கேற்றனர்.

 

Trending News