11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி துவக்கம்!

தமிழகம், புதுவையில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி இன்று தொடங்குகிறது.

Last Updated : Mar 29, 2019, 02:37 PM IST
11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி துவக்கம்! title=

தமிழகம், புதுவையில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி இன்று தொடங்குகிறது.

கடந்த 19ஆம் தேதி மற்றும் 22ஆம் தேதி 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மற்றும் 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நிறைவடைந்தது. இந்நிலையில் இந்த பொதுத் தேர்வுகளுக்கான விடைத்தாள் திருத்தும் பணி தமிழகம் முழுவதும் இன்று தொடங்குகிறது.

இதையடுத்து, ஏப்ரல் 19ம் தேதியன்று 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளும், மே 8ம் தேதியன்று 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளும் வெளியாகிறது.

Trending News