தமிழகத்திற்கு கருப்பு பூஞ்சை மருந்து 100 குப்பிகள் ஒதுக்கீடு

கருப்பு பூஞ்சை நோய்க்கு பயன்படுத்தப்படும் ஆம்போடெரிசின் - பி (Amphotericin B) என்ற மருந்து தமிழகத்திற்கு 100 குப்பிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : May 25, 2021, 12:28 PM IST
  • கருப்பு பூஞ்சை நோய்க்கு ஆம்போடெரிசின் - பி மருந்து பயன்படுத்தப்படும்
  • தமிழகத்திற்கு கருப்பு பூஞ்சை மருந்து 100 குப்பிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது
  • கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை கருப்பு பூஞ்சை நோய் தாக்கிவருகிறது.
தமிழகத்திற்கு கருப்பு பூஞ்சை மருந்து 100 குப்பிகள் ஒதுக்கீடு title=

இந்தியா முழுவதும் இரண்டாம் அலை காரணமாகக் கடந்த சில வாரங்களாகவே வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதற்கிடையில் கொரோனாவிலிருந்து (Coronavirus) மீண்டு வருபவர்களை கருப்பு பூஞ்சை (Black Fungus) என்ற புதிய தொற்று தாக்குவதாக செய்திகள் வெளியாகின. இந்த கருப்பு பூஞ்சை நோய்த்தொற்றால் பாதிக்கும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. இந்த புதிய வகை வைரஸ் காரணமாக தமிழகம், கர்நாடகா, மகாராஷ்டிரா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் உயர்பலிகளும் நிகழ்ந்துள்ளது.

இந்நோய்க்கான மருந்தை ஒதுக்கீடு செய்யவேண்டும் என தமிழக அரசு பரிந்துரை செய்ததின்பேரில் மத்திய அரசு தற்போது, ஆம்போடெரிசின் - பி (Amphotericin B) மருந்தை தமிழகத்துக்கு 100 குப்பிகள் ஒதுக்கீடு செய்துள்ளது.

ALSO READ | தமிழகத்தில் சர்க்கரை நோயாளிகள் 7 பேர் உள்பட 9 பேருக்கு கருப்பு பூஞ்சை பாதிப்பு

இதற்கு முன்னதாக தமிழக மருத்துவ பணிகள் கழகத்தின் சார்பாக கருப்பு பூஞ்சை நோய்க்கு பயன்படுத்தப்படும் ஆம்போடெரிசின் - பி என்ற மருந்து 5000 குப்பிகள் ஒதுக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. அதன்படி மத்திய அரசு 100 குப்பிகளை ஒதுக்கீடு செய்துள்ளது.

கருப்பு பூஞ்சையின் அறிகுறிகளில் கவனம் செலுத்துங்கள்
கருப்பு பூஞ்சையின் அறிகுறிகள் சரியான நேரத்தில் கவனிக்கப்பட்டால், நோயாளியின் உயிரைக் காப்பாற்ற முடியும்:
- கண்களில் அல்லது கண்களைச் சுற்றி சிவப்பாக இருப்பது அல்லது வலி இருப்பது
- அடிக்கடி காய்ச்சல்
- தலையில் கடுமையான வலி
- சுவாசம் மற்றும் மூச்சுத் திணறல்
- இரத்த வாந்தி
- மன நிலையில் மாற்றம் 

கருப்பு பூஞ்சையை தவிர்க்க என்ன செய்ய வேண்டும்
நோயாளி ஹைப்பர் கிளைசீமியாவைத் தவிர்ப்பது மிகவும் முக்கியம். அதாவது நோயாளிகள் தங்களது இரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். கோவிட் -19 ல் இருந்து மீண்டு, மருத்துவமனையில் இருந்து திரும்பிய பின்னர், வீட்டிற்கு வந்த பிறகும் இரத்த குளுக்கோஸ் அளவை குளுக்கோமீட்டரின் உதவியுடன் தொடர்ந்து கண்காணிக்க வேண்டியது அவசியம். ஸ்டெராய்டுகளை அதிகம் பயன்படுத்தாமல் இருப்பது நல்லது. மருந்துகளுக்கான சரியான அளவுகள் மற்றும் நேர இடைவெளிகளை அறிய வேண்டும். மேலும், நுண்ணுயிர் எதிர்ப்பிகள் மற்றும் பூஞ்சை எதிர்ப்பு மருந்துகளை சரியான முறையில் பயன்படுத்த வேண்டும். 

கருப்பு பூஞ்சையை தவிர்க்க என்ன செய்யக்கூடாது
நோயின் அறிகுறிகளை புறக்கணிக்காதீர்கள். மூக்கு அடைபட்டால், அது சைனஸ் பிரச்சனை தான் என எண்ணி அஜாக்கிரதையாக இருக்க வேண்டாம். குறிப்பாக கோவிட் -19 நோயாளிகள் மூக்கடைப்பை சாதாரணமாக எடுத்துக்கொள்ளாதீர்கள். உங்களுக்கு சந்தேகம் வந்தால், உடனடியாக பரிசோதனை செய்து கொள்ளுங்கள். முகோர்மைகாசிஸ் அல்லது கருப்பு பூஞ்சை சிகிச்சையில் தாமதம் ஏற்பட்டால் நோயாளி இறக்க வாய்ப்புள்ளது. ஆரம்பத்தில், அறிகுறிகளைக் கண்டறிந்த பிறகு சரியான நேரத்தில் சிகிச்சை எடுப்பது மிகவும் முக்கியம்.

அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News