துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூற தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வரும் 9-ம் தேதி தூத்துக்குடி பயணிக்கிறார்.
தூத்துகுடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்திகடந்த 22-ம் தேதி பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். அப்போது ஏற்பட்ட கலவரத்தில் போலீசார் துப்பாக்கி சூடு மற்றும் தடியடி நடத்தியதில் 13 பேர் பலியானார்கள். மேலும் இந்த சம்பவத்தில் 100-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
தற்போது இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்துவதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசனை தமிழக அரசு நியமித்து இதுகுறித்து விசாரணை தூத்துக்குயில் தொடங்கியுள்ளார்.
இந்நிலையில், வரும் ஜூன் 9-ம் தேதி தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தூத்துக்குடி செல்கிறார். அங்கு துப்பாக்கி சூட்டில் பலியானவர்களின் குடும்பத்தினர், காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறுகிறார்.
Tamil Nadu CM Edappadi K Palaniswami to visit #Thoothukudi on 9 June and meet those injured during anti-Sterlite protest and families of those shot dead by police during the protest. (file pic) pic.twitter.com/0GCp1sq738
— ANI (@ANI) June 7, 2018