தூத்துக்குடி - மதுரை பைபாஸ் சாலையில் ஸ்டெர்லைட் காப்பர் ஆலை அமைந்துள்ளது. 1994-ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டு, 1996-ஆம் ஆண்டு முதல் இந்த ஆலை உற்பத்தியை தொடங்கியது.
இந்த நிறுவனத்தில் ஆண்டுக்கு 4 லட்சம் டன் தாமிரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. மேலும், வருடத்திற்கு 12 இலட்சம் டன் கந்தக அமிலமும், 2 இலட்சத்து 20 ஆயிரம் டன் பாஸ்பாரிக் அமிலமும் தயாரிக்கப்படுகிறது.
இந்தத் தொழிற்சாலை தொடங்கப்பட்டபோதே, தூத்துக்குடி மக்கள் கடும் எதிர்ப்பு மற்றும் போராட்டங்களை நடத்தினர்
இந்த நிலையில், இந்த ஸ்டெர்லைட் தொழிற்சாலையின் அருகே மேலும் 4 இலட்சம் டன் தாமிரம் உற்பத்தி செய்யும் வகையில் தொழிற்சாலை விரிவாக்கம் செய்யும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
இந்த விரிவாக்கப் பணிக்கு அந்த ஆலையை சுற்றியுள்ள அ.குமரெட்டியாபுரம் உள்ளிட்ட கிராமமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
நேற்று காலை வ.உ.சி கல்லூரி மாணவர்கள் தர்ணா நடத்திய நிலையில், இன்று, ஐடிஐ கல்லூரியின் இந்திய மாணவர் சங்கம் சார்பில் போராட்டம் நடைபெற்றது.
ஸ்டெரலைட் ஆலையை மூட வலியுறுத்தி அவர்கள் போராட்டம் நடத்தினர். ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதே தங்கள் ஒரே நோக்கம் என்று அவர்கள் வலியுறுத்தினர். சனிக்கிழமை மாலை பெரும் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடத்தியிருந்தனர் என்பபது குறிப்பிடத்தக்கது.