இந்திய மல்யுத்தக் கூட்டமைப்பு (WFI) தலைவரும் பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட் பாலியல் குற்றச்சாட்டு அளித்துள்ளார். குறிப்பாக இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங் மற்றும் மற்ற நிர்வாகிகளும் மல்யுத்த வீராங்கனைகளை பாலியல் துன்புறுத்துவதாக வினேஷ் போகட் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். இக்காரணத்தினால் இந்திய மல்யுத்தக் கூட்டமைப்புக்கு எதிராக 11 முதல் 12 மல்யுத்த வீரர், வீராங்கனைகள் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதற்கிடையில் தற்போது முசாபர்நகரில் வசிக்கும் அர்ஜுனா விருது பெற்ற மல்யுத்த வீராங்கனை திவ்யா கக்ரன் WFI தலைவர் பிரிஜ் பூஷன் ஷரனுக்கு ஆதரவாக முன் வந்துள்ளார். இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் வீடியோவை ஒன்றை வெளியிட்டு இருந்தார். தற்போது அவரது இந்த வைரல் ட்விட் வீடியோ வெளியான சில மணி நேரத்தில் நீக்கப்பட்டது.
பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது சுமத்தப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளும் தவறானவை என்று திவ்யா கக்ரன் அந்த வீடியோவில் கூறியிருந்தார். மேலும் போராட்டம் நடத்தும் மல்யுத்த வீரர்கள் பொய் குற்றச்சாட்டு முன் வைக்கின்றனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதுமட்டுமின்றி, தான் ஏறக்குறைய 10 வருடங்களாக மல்யுத்த முகாம்களை நடத்தி வருவதாகவும், யாரிடமும் அவர் தவறாக நடந்துக்கொண்டாகவும் பார்த்ததில்லை என்றும் வைரலான அவரது வீடியோவில் அவர் கூறியிருந்தார்.
மறுபுறம், ஜந்தர் மந்தரில் களமிறங்கிய நாட்டின் நட்சத்திர மல்யுத்த வீரர்களின் பட்டாளம், அனைத்து குற்றச்சாட்டுகளையும் சுமத்தி வருகிறது. இதில் ஸ்பான்சர்களின் பணத்தை சங்கம் சாப்பிடுவதாகவும் குற்றச்சாட்டு உள்ளது. எங்களுக்கு பணம் கூட கிடைக்காது. மேலும் இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு, அடுத்த 72 மணி நேரத்துக்குள் பதில் அளிக்க வேண்டும், இல்லையெனில் தேசிய விளையாட்டு மேம்பாட்டுக் குறியீடு, 2011-ன் விதிகளின்படி, கூட்டமைப்புக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று விளையாட்டு அமைச்சகம் எச்சரித்துள்ளது.
மேலும் படிக்க: பொங்கல் வின்னர் விராட் கோலி... தூள் தூளாகி போன சச்சின் சாதனை!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ