ஐபிஎல் வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான அணிகளில் ஒன்றான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இந்த சீசன் மிகவும் மோசமாக இருந்தது. இந்த சீசனில் தோனி தலைமையிலான சென்னை அணி 4 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. தொடர் தோல்விகளால் பிளேஆஃப் சுற்றுக்கான வாய்ப்பையும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இழந்து தொடரில் இருந்து வெளியேறியுள்ளது. மேலும், மோசமான சாதனை ஒன்றையும் படைத்துள்ளது.
சிஎஸ்கே சாதனை
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இதன்மூலம் நடப்பு ஐபிஎல் தொடரில் மட்டும், அதாவது ஐபிஎல் 2022-ல் மட்டும் 9வது தோல்வியை சந்தித்துள்ளது. ஐபிஎல் வராலற்றில் இதுவரை 9 போட்டிகளில் சென்னை அணி தோல்வியடைந்தது இல்லை. முதன்முறையாக இந்த தொடரில் 9 தோல்விகளை சந்தித்து அந்த மோசமான சாதனையையும் தன்வசப்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க | டிஆர்எஸூக்கு ’நோ’அவுட்டை ஏத்துக்க மாட்டேன் - கொல்கத்தா வீரரின் பிடிவாதம்
சென்னை அணி தோல்வி
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் முதலில் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 133 ரன்களை பெற்றது. பின்னர் களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணி 19.1 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 137 ஓட்டங்களைப் பெற்று 7 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த சீசனில் இரு அணிகள் மோதும் இரண்டாவது போட்டி இது. இரு அணிகளும் மோதிய முதல் போட்டியிலும் சென்னை அணி தோல்வியை தழுவியிருந்தது.
மும்பை அணி பரிதாபம்
இதேபோல் ஐபிஎல் தொடரில் அதிக முறை சாம்பியன் பட்டம் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியும் இதுவரை 12 போட்டிகளில் விளையாடி 9 போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது. மேலும், மும்பை அணி இந்த முறை புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. மும்பைக்கு 2 போட்டிகள் மீதமுள்ள நிலையில், சென்னை அணி ஒரே ஒரு போட்டி மட்டும் உள்ளது.
மேலும் படிக்க | சென்னை அணியில் இருந்து தோனி வெளியேறினால்....பாக்.வீரரின் ஆருடம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR