தோனி மாதிரி சேவாக், கம்பீரை ஆதரிக்காதது ஏன்? - யுவராஜ் சிங் ஆதங்கம்!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியை போன்று கம்பீர், சேவாக், ஹர்பஜன் சிங் போன்றோரை அணி நிர்வாகம் ஆதரிக்கவில்லை என யுவராஜ் சிங் விரக்தி தெரிவித்துள்ளார். 

Written by - Arunachalam Parthiban | Last Updated : May 2, 2022, 01:10 PM IST
  • கோலி, ரவி சாஸ்திரியின் ஆதரவால் தான் தோனி 2019 உலகக்கோப்பையில் விளையாடினார்
  • மகேந்திர சிங் தோனிக்கு கிடைத்ததை போன்ற ஆதரவு மற்ற வீரர்களுக்கு கிடைக்காது
  • இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் விமர்சனம்
தோனி மாதிரி சேவாக், கம்பீரை ஆதரிக்காதது ஏன்? -  யுவராஜ் சிங் ஆதங்கம்! title=

Home of Heros எனும் நிகழ்ச்சி ஸ்போர்ட்ஸ் 18 சேனலில் நேற்று ஒளிபரப்பானது. இதில் பங்கேற்று பேசிய யுவராஜ் சிங் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியை போன்று கம்பீர், சேவாக், ஹர்பஜன் சிங் போன்றோரை அணி நிர்வாகம் ஆதரிக்கவில்லை என தெரிவித்தார். 

மேலும் யுவராஜ் சிங் கூறும்போது, '' ஒரு வீரராக பயிற்சியாளர் மற்றும் கேப்டனிடமிருந்து உங்களுக்கு ஆதரவு கிடைத்தால் அது நிச்சயம் உதவிகரமாக இருக்கும். உதாரணமாக மஹியை (மகேந்திர சிங் தோனி) எடுத்துக்கொள்ளுங்கள் அவருடைய கிரிக்கெட் வாழ்க்கையின் இறுதி நாட்களில் கேப்டன் விராட் கோலி மற்றும் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி அதிக ஆதரவு அளித்தனர். 

இதனால் 2019 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் தோனி விளையாடினார். இந்த ஆதரவினால் கடைசி வரை அவர் விளையாடினார். 350 ஒருநாள் போட்டிகளை தோனி விளையாடியுள்ளார். 

ஆனால், அணி நிர்வாகம், கேப்டன், பயிற்சியாளர் இவர்களின் ஆதரவு அனைத்து வீரர்களுக்கும் கிடைக்காது. கம்பீர், சேவாக், ஹர்பஜன் சிங், விவிஎஸ் ல‌ஷ்மன் போன்றவர்களுக்கு இந்த சப்போர்ட் கிடைத்ததா என்றால் இல்லை என்று தான் கூற வேண்டும். 

உங்கள் தலைக்கு மேல் கத்தி தொங்கிக்கொண்டிருக்கும் போது உங்களால் எப்படி சிறப்பாக பவுலிங்கோ அல்லது பேட்டிங்கோ செய்ய முடியும்? நான் இப்படி கூறுவது சரியாக விளையாடாததற்கான சாக்கு போக்கு இல்லை. ஆனால், பலதரப்பட்ட பயிற்சியாளர்கள் மாறியதால் 2019-க்கு பிறகான காலம் மாறிப்போனதே காரணம்'' என அந்த பேட்டியில் யுவராஜ் சிங் தெரிவித்தார். 

மேலும் படிக்க | ஓய்வில் இருந்து திரும்புவதாக அறிவித்த யுவராஜ் சிங்! மீண்டும் இந்திய அணியில் வாய்ப்பா?

யுவராஜ் சிங் கூறியது போன்று இதற்கு முன்னர் தோனி குறித்த எதிர்மறையான கருத்துகளை கம்பீர், சேவாக், ஹர்பஜன் சிங் போன்ற முன்னாள் வீரர்களும் முன்வைத்துள்ளனர். குறிப்பாக பிசிசிஐ முன்னாள் தலைவரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளருமான சீனிவாசனின் ஆதரவு தோனிக்கு அதிகம் இருந்ததாலேயே அவரால் அதிகம் சாதிக்க முடிந்ததாக கூறப்படுவது உண்டு. மொஹிந்தர் அமர்நாத் தேர்வுக்கு குழு தலைவராக இருந்தபோது தோனியை கேப்டன் பதவியில் இருந்து நீக்க முயன்றதாகவும் ஆனால் அதனை அப்போதைய பிசிசிஐ தலைவர் சீனிவாசன் தடுத்து நிறுத்தியதாகவும் அவரே குறிப்பிட்டுள்ளார். 

மேலும், இந்திய அணியில் தோனி அதிக காலம் நீடிக்க முடிந்ததற்கு காரணம் அவருடைய விளையாட்டு திறனை விட வணிக காரணங்களே அதிகம் என கிரிக்கெட் விமர்கர்கள் குறிப்பிட்டுள்ளனர். இருப்பினும் யுவராஜ் சிங்கின் இந்த கருத்து தோனி ரசிகர்களை கோபப்படுத்திவிட்டது. தோனியை போன்று தன்னை விராட் கோலி நடத்தவில்லை என யுவராஜ் தற்போது கண்ணீர் வடிக்கிறார் என சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். 

எதிர் அணி வீரர்களே தோனி மீது அபரிமிதமான மரியாதை வைத்து புகழும்போது 2011-ம் ஆண்டு பேட்ச் இந்திய கிரிக்கெட் வீரர்கள் மட்டும் தோனி மீது உச்சகட்ட பொறாமையில் உள்ளனர் என ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். 

மேலும் படிக்க | இவர்தான் சரியான ஆள்., பிசிசிஐக்கு அட்வைஸ் கொடுத்த யுவராஜ் சிங்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News