ஐரோப்பிய கால்பந்து: இங்கிலாந்து-ரஷியா ஆட்டத்தில் ரசிகர்கள் மோதல்

Last Updated : Jun 13, 2016, 12:13 PM IST
ஐரோப்பிய கால்பந்து: இங்கிலாந்து-ரஷியா ஆட்டத்தில் ரசிகர்கள் மோதல் title=

இந்த ஆட்டம் டிராவில் முடிந்ததைத் தொடர்ந்து மைதானத்திற்கு வெளியே ரகளையில் ஈடுபட்ட இங்கிலாந்து மற்றும் ரஷ்ய ரசிகர்கள் ஆட்டம் முடிந்ததும் மைதானத்திற்குள்ளும் வன்முறையில் குதித்தனர். இரு தரப்பினரும் மோதிக்கொண்டதுடன், ஒருவரையொருவர் பாட்டில்களாலும், நாற்காலிகளாலும் தாக்கிக்கொண்டனர். கேலரியின் ஒரு பகுதிக்கு தீ வைத்தனர். இந்த சம்பவத்தில் 35க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். போலீஸார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தண்ணீரைப் பீய்ச்சியடித்தும் இவர்களை கலைத்தனர். 

இது தொடர்பாக ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பு அவசர ஆலோசனை நடத்தியது. ரசிகர்களின் வன்முறை நீடித்தால் இங்கிலாந்து, ரஷிய அணிகளை ஐரோப்பிய கால்பந்து தொடரில் இருந்து தகுதி நீக்கம் செய்ய நேரிடும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

Trending News