Tokyo Paralympics: பிரவீன் குமார் ஆண்களுக்கான உயரம் தாண்டும் போட்டியில், T64 பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றார். இதை அடுத்து டோக்கியோவில் நடந்து வரும் விளையாட்டுகளில் இந்தியா பெற்ற பதக்கங்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. 18 வயதான குமார், தனது முதல் பாராலிம்பிக் போட்டிகளில், கிரேட் பிரிட்டனின் ஜொனாதன் ப்ரூம்-எட்வர்ட்ஸை பின்னுக்குத் தள்ளி 2.07 மீட்டர் தாண்டி, ஆசிய அளவில் புதிய சாதனை படைத்தார்.
இதில் ரியோ விளையாட்டு சாம்பியன் போலந்தின் மேசிஜ் லெபியாடோவுக்கு வெண்கலம் கிடைத்தது, அவர் 2.04 மீட்டர் தாண்டினார். T64 பிரிவு என்பது உடலில் கால் உறுப்பு நீக்கப்பட்ட விளையாட்டு வீரர்களுக்கான பிரிவு ஆகும்.
ALSO READ | I'm sorry. Rules are rules: தாமதமாக வந்ததால் தங்கப் பதக்கத்தை இழந்த வீரர்! சோகக்கதை
பிரதமர் நரேந்திர மோடி (PM Narendra Modi), பிரவீன்குமாரைப் பாராட்டி ட்வீட் செய்து, 'அவரது சாதனை குறித்து பெருமைப்படுகிறேன்' என்று கூறினார். "பாராலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்றதற்காக பிரவீன் குமார் நாடு பெருமைப்படுகிறது. இந்த பதக்கம் அவரது கடின உழைப்பு மற்றும் ஈடு இணையற்ற அர்ப்பணிப்பின் விளைவாகும். அவருக்கு வாழ்த்துக்கள். அவரது எதிர்கால முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள்" என்று பிரதமர் மோடி ட்வீட் செய்துள்ளார்.
Proud of Praveen Kumar for winning the Silver medal at the #Paralympics. This medal is the result of his hard work and unparalleled dedication. Congratulations to him. Best wishes for his future endeavours. #Praise4Para
— Narendra Modi (@narendramodi) September 3, 2021
தற்போது இந்தியா முன்னெப்போதும் இல்லாத வகையில், விளையாட்டுக்க்களில் சாதனை புரிந்து வருகிறது. இந்தியா இதுவரை இரண்டு தங்கம், ஆறு வெள்ளி மற்றும் மூன்று வெண்கலப் பதக்கங்களை பெற்றுள்ளது.
துப்பாக்கி சுடும் வீரர் ஆவணி லேகாராவுக்குப் பிறகு குமார் விளையாட்டுப் போட்டியில் பதக்கம் வென்ற இரண்டாவது இளைஞர் ஆவார். 19 வயதான லெகாரா தங்கம் வென்றார்.
இந்தியாவின் 11 பதக்கங்களில் எட்டு தடகளத்தில் போட்டிகளில் கிடைத்துள்ளன, இதில் சுமித் ஆன்டில் (F64) மூலம் ஆண்கள் ஈட்டி எறிதலில் கிடைத்த ஒரு தங்கம் அடங்கும். தடகள போட்டிகளில் வெண்கலத்துடன் இந்தியா இதுவரை ஐந்து வெள்ளிப் பதக்கங்களை வென்றுள்ளது.
ALSO READ | Pkl 2021: புரோ கபடி லீக் சீசன் 8: அதிக விலைக்கு ஏலம் போன வீரர்கள்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR