டோக்கியோ ஒலிம்பிக்கின் தலைவிதியை தீர்மானிக்க 3 மாதங்கள் கெடு

டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டி நடத்தப்படுமா? என தீர்மானிக்க மூன்று மாத காலம் இருப்பதாக ஐ.ஓ.சியின் மிக நீண்ட காலம் உறுப்பினரான டிக் பவுண்ட் கூறியுள்ளார்.

Written by - Shiva Murugesan | Last Updated : Feb 26, 2020, 02:23 PM IST
டோக்கியோ ஒலிம்பிக்கின் தலைவிதியை தீர்மானிக்க 3 மாதங்கள் கெடு title=

புது டெல்லி: டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டி (Tokyo Olympics) நடத்தப்படுமா? இல்லையா? என்ற தலைவிதியை தீர்மானிக்க மூன்று மாத காலம் இருப்பதாக ஐ.ஓ.சியின் மிக நீண்ட காலம் உறுப்பினரான டிக் பவுண்ட் (Dick Pound) மதிப்பிட்டுள்ளார். இதற்கு காரணம் சீனாவிலிருந்து வேகமாக பரவும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் தான். இவர் 1978 முதல் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி உறுப்பினராக இருந்து வருகிறார்.

டிக் பவுண்ட், ஒரு பிரத்யேக பேட்டியில், அவர் எச்சரிக்கை விடுக்கவில்லை. ஆனால் ஜூலை 24 ஆம் தேதி துவங்கும் ஒலிம்பிக்கில் போட்டியில் ஏற்படும் அபாயங்கள் குறித்து வெளிப்படையாக பேசினார். 

கொரோனா வைரஸ் குறித்து பேசிய அவர், "ஒலிம்பிக் போட்டி நடக்க வேண்டும் என்றால் நிச்சயமாக இரண்டு மாதங்களுக்குல், இந்த நோயின் தாக்கம் சரியாக வேண்டும் என்று பவுண்ட் கூறினார், இதன் பொருள் மே பிற்பகுதி வரை போட்டியின் முடிவை தள்ளி வைத்து வைரஸ் கட்டுப்பாடு குறித்து ஆலோசனை செய்ய வேண்டும் என்று நம்புகிறேன் என்றார். 

நிறைய விஷயங்கள் நடக்க ஆரம்பிக்க வேண்டும். பாதுகாப்பு, உணவு, ஒலிம்பிக் கிராமம், ஹோட்டல்கள் போன்றவற்றை அதிகரிக்கத் தொடங்க வேண்டும். ஊடகத்துறையினர் ஸ்டுடியோக்களைக் கட்டியெழுப்புவார்கள். எனவே வைரஸ் தாக்கம் குறையவில்லை என்றால், போட்டி ரத்து செய்யப்படுவதை தான் பார்க்க வேண்டும்.

இது புதிய போர், அதை எதிர்கொள்ள வேண்டும். அதே நேரத்தில், இது போதுமான கட்டுப்பாட்டில் உள்ளதா, டோக்கியோவுக்குச் செல்வது குறித்து நாங்கள் நம்பிக்கையுடன் இருக்கலாமா, இல்லையா? போன்ற கேள்விகள் எழுப்பப்டும் என்றார். 

பவுண்ட் விளையாட்டு வீரர்களை பயிற்சியளிக்க ஊக்குவித்தார். ஆகஸ்ட் 25 ஆம் தேதி துவங்கும் ஒலிம்பிக்கில் சுமார் 11,000 பேரும், பாராலிம்பிக்கிற்கு சுமார் 4,400 பேரும் கலந்துக்கொள்வார்கள் என எதிர் பார்க்கப்படுகிறார்கள்.

நான் அறிந்தவரை அனைவரும் டோக்கியோவில் இருக்கப் போகிறீர்கள்" என்று பவுண்ட் கூறினார். எல்லா அறிகுறிகளும் இந்த கட்டத்தில் வழக்கம்போல வணிகமாக இருக்கும். எனவே உங்கள் விளையாட்டில் கவனம் செலுத்துங்கள். ஐ.ஓ.சி உங்களை ஒரு தொற்றுநோய்க்கு அனுப்பப் போவதில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள் என்றார். 

1896 ஆம் ஆண்டு முதல் நவீன ஒலிம்பிக் போர்க்காலத்தில் மட்டுமே ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் 1976 ஆம் ஆண்டில் மாண்ட்ரீலில், 1980 இல் மாஸ்கோவிலும், 1984 லாஸ் ஏஞ்சல்ஸிலும் ஒலிம்பிக் போட்டி புறக்கணிக்கப்பட்டது. அதேபோல 1940 இல் ஒலிம்பிக் போட்டி டோக்கியோவில் நடக்கவேண்டியிருந்தது, ஆனால் ஜப்பானின் சீனாவுடனான போர் மற்றும் இரண்டாம் உலகப் போர் காரணமாக அவை நிறுத்தப்பட்டன.

செவ்வாயன்று வெளியான தகவலின் படி, சீனாவில் புதிதாக மேலும் 508 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு மற்றும் 71 பேர் இறப்புகளையும் தகவல் வெளியாகி உள்ளது. சீனாவின் மொத்த நிலப்பரப்பில் 77,658 பேருக்கு வைரஸ் பாதிப்பு மற்றும் 2,663 பேர் இறந்துள்ளனர். 

இப்போது உலகில் இரண்டாவது இடத்தில் தென் கொரியா உள்ளது. அங்கு 977 பேருக்கு. இந்த வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதில் 10 பேர் பலியாகி உள்ளனர். 

இந்த நோயின் தாக்கம் இப்போது மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பாவில் அதிக அளவில் இருக்கிறது. அதேநேரத்தில் இது ஜப்பானில் நான்கு பேர் இறந்துள்ளதாக பதிவாகியுள்ளது.

Trending News