’கொல்கத்தாவுக்குள் ஏதோ சரியில்லை’ போட்டுடைத்த வீரர்

கொல்கத்தா அணிக்குள் ஏதோ சரியில்லை என மூத்த வீரர் டிம் சவுத்தி வெளிப்படையாக பேசியுள்ளார்.

Written by - S.Karthikeyan | Last Updated : Apr 29, 2022, 05:20 PM IST
  • தொடர்ச்சியாக 5 போட்டிகளில் கொல்கத்தா அணி தோல்வி
  • வெற்றிப்பாதைக்கு திரும்புவது தெரியாமல் அணிக்குள் குழப்பம்
  • தொடக்க ஜோடிகளை அடிக்கடி மாற்றுகிறது கொல்கத்தா அணி
’கொல்கத்தாவுக்குள் ஏதோ சரியில்லை’ போட்டுடைத்த வீரர் title=

ஐபிஎல் தொடரை சிறப்பாக தொடங்கிய கொல்கத்தா அணி, தோல்விப் பாதையில் தத்தளித்துக் கொண்டு இருக்கிறது. கடைசி 5 போட்டிகளில் தொடர்ச்சியாக தோல்வியை சந்தித்திருக்கும் அந்த அணி, திசை தெரியாத கப்பல் போல் உள்ளது. இது குறித்து பேசிய டிம் சவுத்தி, அணிக்குள் என்ன நடக்கிறது என்பது தெரியவில்லை எனத் தெரிவித்துள்ளார். 

கொல்கத்தா அணியின் நிலை

கொல்கத்தா அணி இதுவரை 4 தொடக்க ஜோடிகளை பயன்படுத்தியுள்ளது. ஒருவர் மோசமாக விளையாடினால், அடுத்த போட்டியில் புதிய தொடக்க ஜோடியை களமிறக்குவது என்ற யுக்தியை பயன்படுத்தி வருகிறது. ஆனால், அந்த முயற்சிகள் கொல்கத்தா அணிக்கு கை கொடுத்தாக தெரியவில்லை. வியாழக்கிழமை நடைபெற்ற டெல்லிக்கு எதிரான போட்டியிலும் தோல்வியை தழுவியது. இதனால் புள்ளிப் பட்டியலில் அந்த அணி 8வது இடத்தைப் பிடித்துள்ளது. தோல்விக்குப் பிறகு பேசிய டிம் சவுத்தி, அணிக்குள் என்ன நடக்கிறது என்பது தெரியவில்லை. ஏலத்திற்குப் பிறகு ஒரு அணியாக நாங்கள் விளையாடத் தொடங்கவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க | முன்னாள் அணியை பழிக்கு பழி தீர்த்த டெல்லி பவுலர் 

சிறப்பான வீரர்கள்

அணிக்குள் இருக்கும் வீரர்கள் சிறப்பானவர்கள் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், அடிக்கடி தொடக்க ஜோடிகள் மாற்றபடுவது, பின்னடைவுக்கான காரணமோ என எண்ணத் தோன்றுகிறது. வீரர்கள் சரியாக விளையாடாதபோது ஒருவரை மாற்றலாம். ஆனால், மேற்கொள்ளப்பட்ட மாற்றங்கள் அனைத்தும் சரியாக அமையாதபோது, என்ன செய்ய வேண்டும் என மீண்டும் யோசிப்பது கடினம் எனக் கூறியுள்ளார்

அணிக்குள் நிலைமை சரியில்லை

ஒரு வீரருக்கு பதிலாக இன்னொரு வீரர் களமிறக்கப்படுவது, சரியான சூழல் இல்லாதபோது மட்டுமே நடைபெறும். ரஹானே மற்றும் வெங்கடேஷ் ஐயர் ஆகியோர் தொடக்க ஜோடிகளாக 5 போட்டிகளில் களம் கண்டனர். அவர்கள் இணை எதிர்பார்த்த அளவுக்கு விளையாடவில்லை. சாம்பில்லிங்ஸ், சுனில் நரைன் மற்றும் பின்ச் ஆகியோர் வெவ்வேறு போட்டிகளில் களமிறக்கப்பட்டனர். அந்த யுக்தியும் கைகொடுக்கவில்லை. இதனால், என்ன நடக்கிறது என்பது குழப்பமாக இருக்கிறது. இதில் இருந்து நிச்சயம் மீண்டு அணியாக செயல்படுவோம் எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க | மும்பை இந்தியன்ஸ் ஏலத்தில் தவறவிட்ட 3 ஸ்டார் பிளேயர்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News