ஐபிஎல் 2025 மெகா ஏலத்தில் இந்த 2 அணிகள் யாரையும் தக்க வைக்க போவது இல்லை!

நடந்து முடிந்த ஐபிஎல் 2024 இறுதி போட்டியில் கொல்கத்தா அணி ஹைதராபாத் அணியை தோற்கடித்து வெற்றி பெற்றது. அடுத்த ஆண்டு மெகா ஏலமும் நடைபெற உள்ளது.  

Written by - RK Spark | Last Updated : May 30, 2024, 07:14 AM IST
  • ஐபிஎல் 2025ல் நடக்கும் மெகா ஏலம்.
  • கடந்த முறை 3 வீரர்கள் தக்கவைக்கப்பட்டனர்.
  • புதிய விதிகள் இனிதான் கூறப்படும்.
ஐபிஎல் 2025 மெகா ஏலத்தில் இந்த 2 அணிகள் யாரையும் தக்க வைக்க போவது இல்லை! title=

அடுத்த ஆண்டு ஐபிஎல் 2025ல் மெகா ஏலம் நடைபெறும் என்று ஏற்கனவே தகவல்கள் வெளியானது. மெகா ஏலத்தின் போது ஒவ்வொரு அணிகளும் 3 முதல் 4 வீரர்களை மட்டுமே தக்கவைத்து கொள்ள முடியும். இந்த சமயத்தில் அணியில் உள்ள மற்ற வீரர்களை விடுவிக்க வேண்டும். கடைசியாக 2022 ஆம் ஆண்டு ஐபிஎல் மெகா ஏலம் நடைபெற்றது. இந்த சமயத்தில் தான் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் ஆகிய இரண்டு புதிய அணிகள் ஐபிஎல்லில்  நுழைந்தது. 2025ல் புதிய அணிகள் எதுவும் இருக்காது என்றாலும், மெகா ஏலம் நடைபெறும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் ஐபிஎல் மெகா ஏலம் விதிகள் தொடர்பான பரிந்துரைகள் மற்றும் அறிக்கைகள் வந்துள்ளன. 

மேலும் படிக்க | இந்திய அணியின் பயிற்சியாளர் கம்பீர் தான்...!? வெளியான பரபரப்பு தகவல்!

ஒரு அணி எத்தனை வீரர்களை தக்கவைத்துக்கொள்ளலாம் என்ற விவாதம் நடந்து கொண்டிருக்கும் வேளையில், கொல்கத்தா அணியின் தலைமை நிர்வாக அதிகாரி வெங்கி மைசூர் ஒரு தனித்துவமான ஆலோசனையை வழங்கியுள்ளார். "அனைத்து ஐபிஎல் அணிகளும் தங்கள் நட்சத்திர வீரர்களை சந்தை மதிப்பில் தக்க வைத்துக் கொள்ள, ஏலத்தில் அனைத்து வீரர்களையும் விடுவிக்க வேண்டும். ஆனால் ஒவ்வொரு அணிக்கும் 8 RTM கார்டுகள் கொடுக்கப்பட வேண்டும். இதனால் ஐபிஎல் நிர்வாகம் வீரர்களை நியாயமான விலையில் திரும்ப வாங்க முடியும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஐபிஎல் 2022 மெகா ஏலத்தின் போது, ​​ஒவ்வொரு ஐபிஎல் அணி உரிமையாளருக்கும் ரூ.90 கோடி பர்ஸ் ஒதுக்கப்பட்டது. இதில் ஒவ்வொரு அணிகளும் அதிகபட்சமாக 4 வீரர்களைத் தக்கவைத்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டது. இருப்பினும், அணிகள் அதிகபட்சமாக 3 இந்தியர்கள் மற்றும் 2 வெளிநாட்டு வீரர்களை மட்டுமே தக்க வைத்துக் கொள்ள முடிந்தது. கொல்கத்தா தலைமை நிர்வாக அதிகாரி வெங்கியின் ஆலோசனையை பிசிசிஐ ஏற்றுக்கொள்ளுமா இல்லையா என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும். ஆனால் அடுத்த ஆண்டுக்கு முன்பு பின்வரும் இரண்டு அணிகள் யாரையும் தக்க வைக்க வாய்ப்பில்லை.

பஞ்சாப் கிங்ஸ் 

ஐபிஎல் 2025ல் மீண்டும் ஒரு புதிய அணியாக வர பஞ்சாபிற்கு வாய்ப்புள்ளது. பஞ்சாப் கிங்ஸ் பிளே ஆப்களுக்கு தகுதி பெற்று கிட்டத்தட்ட 10 வருடங்கள் ஆகிறது. கடைசியாக 2014 சீசனில் பிளேஆஃப்களுக்குத் தகுதி பெற்றனர். இந்த ஆண்டு பஞ்சாப் கிங்ஸ் அணியில் முக்கிய வீரர்களுக்கு காயம் காரணமாக சரியான அணியை உருவாக்க முடியவில்லை. எனவே அடுத்த ஆண்டு கோப்பையை வெல்ல அணியில் உள்ள அனைத்து வீரர்களையும் விடுவித்து முற்றிலும் புதிய அணியை உருவாக்க நினைக்கலாம். 

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் 

ஐபிஎல்லில் புதிய அணியாக வந்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் 2022 மற்றும் 2023ம் ஆண்டு வலுவான அணியாக இருந்தது. இரண்டு சீசனிகளிலும் பிளே ஆப்க்கு தகுதி பெற்று எலிமினேட்டர் போட்டியில் தோல்வி அடைந்தனர். இந்த ஆண்டு லக்னோ அணி பிளே ஆப்களுக்கு கூட தகுதி பெறாமல் வெளியேறியது. மேலும் கேப்டன் கே.எல்.ராகுலுக்கும் லக்னோ உரிமையாளர் கோயங்காவுக்கும் இடையே சில மனக்கசப்பும் ஏற்பட்டுள்ளது. எனவே அடுத்த ஆண்டு லக்னோ அணி கேப்டனை மாற்ற முடிவு செய்தால் முற்றிலும் புதிய அணியை கொண்டிருக்கும்.

மேலும் படிக்க | ரியான் பராகை காட்டிக் கொடுத்த history என்ன சிம்ரன் இது!! 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News