பவுமா எப்போ விளையாடப்போறீங்க? அரையிறுதி வந்துருச்சு - தென்னாப்பிரிக்கா கூத்து

கேப்டன் பவுமாவின் ஆட்டம் சிறப்பாக இல்லாமலேயே தென்னாப்பிரிக்கா அணி இந்த உலக கோப்பையில் ஜொலித்துக் கொண்டிருக்கிறது.   

Written by - S.Karthikeyan | Last Updated : Nov 2, 2023, 08:53 AM IST
  • ஒழுங்கா ஆடாத தென்னாப்பிரிக்கா கேப்டன்
  • பவுமா ஆட்டத்தை பார்த்து குமுறும் ரசிகர்கள்
  • அரையிறுதியில் வந்துருச்சு என ஆதங்கம்
பவுமா எப்போ விளையாடப்போறீங்க? அரையிறுதி  வந்துருச்சு - தென்னாப்பிரிக்கா கூத்து title=

உலக கோப்பையில் தென்னாப்பிரிக்கா அணி அரையிறுதி வாய்ப்பை ஏறக்குறைய உறுதி செய்துவிட்டது. ஆனாலும் இதுவரை அந்த அணியின் கேப்டன் பவுமாவிடம் இருந்து ஒரு சூப்பரான இன்னிங்ஸ் வெளிப்படவில்லை. தென்னாப்பிரிக்கா ரசிகர்கள் ஐயா சாமி ஒரு ஆட்டமாவது சும்மா தரமா காட்டிடுயா...னு எதிர்பார்த்து காத்திருக்க, கேப்டன் பவுமா மங்காத்தா படத்தில் வரும் ‘ ஆடாம ஜெயிச்சோமடா.... நாங்க வாழாம ஜெயிச்சோமடா, ஓடாம ரன் எடுத்தோம், சும்மா உட்கார்ந்தே வின் எடுத்தோம்’ என்ற கணக்கா ஜாலியாக இருக்கிறார். டீமில் இருக்கும் எல்லா பிளேயர்களும் உசுரை கொடுத்து விளையாடிகிட்டு இருக்கும்போது இவரு மட்டும் இருபது ரன், பத்து ரன் எடுத்துட்டுகூலாக போய் பெவிலியனில் உட்கார்ந்து கொள்கிறார். யாரோ அடிச்சு வின் பண்ணிருவாங்கன்ற நம்பிக்கை அவருக்கு. கேமராமேன் வேற, தென்னாப்பிரிக்க அணியில் எந்த பிளேயராவது சிறப்பாக விளையாடிவிட்டால் உடனே போர்வை போர்த்திக் கொண்டு பெவிலியனில் போட்டியை சக ரசிகர் போலவே ரசித்துக் கொண்டிருக்கும் பவுமாவை போகஸ் செய்துவிடுவார். 

மேலும் படிக்க | சூர்யகுமார் யாதவ் எடுத்த புதிய அவதாரம்... ஷாக் ஆன ஜடேஜா - வீடியோவை பாருங்க!

ஆடாமல் இருப்பது கூட பவுமாவுக்கு கூச்சமாக இருக்காது. இந்த கேமராமேன் அடிக்கடி போகஸ் செய்வது தான் அவருக்கு நிச்சயம் கூச்சமாக இருக்கும். டிகாக் இந்த உலக கோப்பையுடன் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதால் வரிசையாக சதமாக அடித்துக் கொண்டிருக்கிறார். எப்படியாவது உலக கோப்பை இதுவரை அடிக்கவில்லை என்ற கனவை போக்கிவிட வேண்டும் என்பதில் அவர் தீர்க்கமாக இருப்பது டிகாக்கின் ஆட்டத்தை பார்த்தால் தெரியும். ஆனால் அப்படியான ஆட்டத்தை எல்லாம் தென்னாப்பிரிக்கா அணியின் கேப்டன் பவுமாவிடம் எதிர்பார்க்க முடியாது. எதிர்பார்ப்பதும் தவறு. யாரோ தோனியைபோல் கூல் கேப்டனாக இருங்கள் என அட்வைஸ் செய்துவிட்டார்கள் போல தெரிகிறது. அதனால் மைதானத்தில் பெரியதாக எதுவுமே பவுமாவிடம் ரியாக்ஷன் இருக்காது. அதற்காக பேட்டிங்கிலும் கூடவா? என்பது தான் இங்கு மிகப்பெரிய கேள்வி. 

தோனியை போலவே கடைசி கட்டத்தில் ஆடி அணியை வெற்றிக்காவது அழைத்துச் செல்லலாம் என்ற பொறுப்பையாவது எடுத்திருந்தால் பரவாயில்லை. அதுவும் இல்லாமல் தனக்கு எது சவுகரியமாக இருக்குமோ அதனை மட்டுமே ஒரு கேப்டனாக பவுமா செய்து கொண்டிருக்கிறார். அதாவது ஓப்பனிங் இறங்கி இரண்டு பவுண்டரி, ஒரு சிக்ஸ் அடித்துவிட்டால் தன்னுடைய கடமை முடிந்துவிடுகிறது என்ற நினைப்பில் இருக்கிறார். ஒட்டுமொத்த அணியாக தென்னாப்பிரிக்கா ஜெயித்ததால் ஓரளவு கிண்டல் கேலியுடன் தப்பித்து இருக்கிறார். இல்லையென்றால் இன்னும் கடுமையான வசைசொல்லுக்கு உள்ளாக்கியிருக்கார் அவர். இவர் ஆடாத இரண்டு போட்டிகளில் ஆடிய ஹென்றிக்ஸ் சூப்பராக ஆடி, நல்ல வரவேற்பையும் பெற்றார். ஆனால் அவரை வெளியே உட்கார வைத்துவிட்டு பவுமா எதற்கு பிளேயிங் லெவனில் ஆடிக் கொண்டிருக்கிறார் என தென்னாப்பிரிக்கா ரசிகர்களே கேட்கின்றனர்.

அணி உலக கோப்பையை வெல்ல வேண்டுமானால் பவுமாவை வெளியே உட்கார வைத்துவிட்டு, அரையிறுதிப் போட்டியில் ஹென்றிக்ஸூடன் விளையாட வேண்டும் என்றும் கூறுகின்றனர்.அதேநேரத்தில் பவுமா மோசமான பிளேயரா என்றால், உலக கோப்பை போட்டிக்கு முன்பாக 10 போட்டிக்களில் 600 ரன்களுக்கும் மேல் அடித்திருக்கிறார். இதில் மூன்று சதங்களும் அடங்கும். அப்படி இருக்கும்போது, கேப்டன் பொறுப்பு அவருடைய ஆட்டத்தை பாதிக்கிறதா? என்ற கேள்வியையும் நிபுணர்கள் முன்வைக்கின்றனர்.

மேலும் படிக்க | உலகக் கோப்பை: அரையிறுதிக்கு செல்ல இந்த அணிகளுக்கு இன்னும் வாய்ப்புகள் இருக்கு..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News