ISSFWorldCup: ஜூனியர் ஏர் ரைபிள் பிரிவில் ஹிரிடே ஹஸாரிகா தங்கம்...!

ஜூனியர் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்தியாவின் ஹிரிடே ஹஸாரிகா தங்கம் வென்றார்...! 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 7, 2018, 12:11 PM IST
ISSFWorldCup: ஜூனியர் ஏர் ரைபிள் பிரிவில் ஹிரிடே ஹஸாரிகா தங்கம்...!   title=

சர்வதேச துப்பாக்கிச் சுடுதல் போட்டி: ஜூனியர் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்தியாவின் ஹிரிடே ஹஸாரிகா தங்கம் வென்றார்...! 

கொரியாவில் நடந்து வரும் உலக சாம்பியன்ஷிப் துப்பாக்கி சுடுதல் போட்டியில் ஜூனியர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் தங்கம் வென்றுள்ளார் இந்தியாவின் ஹிரிடே ஹஸாரிகா. இவர் சென்ற வாரம் முடிந்த ஆசிய கோப்பை போட்டியில் வெள்ளை பதக்கம் வென்று அசத்தினார். தற்போது மீண்டும் உலக சாம்பியன்ஷிப்பிலும் தங்கம் வென்று சாதித்துள்ளார். இதில் தான் முன்பு செய்த சாதனையை தானே முறியடித்துள்ளார்.

கொரியாவில் நடந்து வரும் உலக சாம்பியன் துப்பாக்கி சுடுதல் போட்டிகளில் ஹிரிடே ஹஸாரிகா 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் 250.1 புள்ளிகள் பெற்று முதல் இடம் பிடித்து தங்கம் வென்றார். மேலும் இந்த பிரிவில் உலக சாதனை செய்துள்ளார். இவர் சமீபத்தில் நடந்து முடிந்த ஆசிய விளையாட்டில் வெள்ளி பதக்கம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Trending News