இதற்கு முன் ஜடேஜா கேப்டனாக இருந்த அணிகள்!

ஐபிஎல் 2022 போட்டியில் சி.எஸ்.கே அணியின் கேப்டனாக ஜடேஜா நியமிக்கப்பட்டுள்ளார்.  

Written by - RK Spark | Last Updated : Mar 24, 2022, 06:55 PM IST
  • சென்னை அணியின் கேப்டனாக ஜடேஜா நியமனம்.
  • தோனி ஒரு வீரராக களம் இறங்க உள்ளார்.
  • ஐபிஎல் போட்டிகள் மார்ச் 26 முதல் தொடங்க உள்ளது.
இதற்கு முன் ஜடேஜா கேப்டனாக இருந்த அணிகள்! title=

ஐபிஎல் 2022 போட்டிகள் மார்ச் 26 முதல் தொடங்க உள்ளது, 10 அணிகளும் இதற்கான தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் ஐபிஎல் போட்டிகள் நடைபெற உள்ளது, கொரோனா காரணமாக மும்பையில் உள்ள நான்கு மைதானங்களில் மட்டும் அனைத்து போட்டிகளும் நடைபெற உள்ளது. இந்நிலையில் சிஎஸ்கே அணியின் கேப்டன் பதவியை தோனி, ஜடேஜாவிடம் ஒப்படைத்துள்ளார், இது தோனி ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. 

CSK Twitter

மேலும் படிக்க | எம்எஸ் தோனியின் கேப்டன்சி சாதனைகள்!

 

சிஎஸ்கே-வின் கேப்டனாக இருந்து தோனி 4 ஐபிஎல் கோப்பைகளையும், 2 சாம்பியன்ஸ் லீக் கோப்பையையும் வென்று கொடுத்துள்ளார். மேலும் வரலாற்றில் மிகச் சிறந்த கேப்டன் என்ற பெருமையையும் பெற்றுள்ளார் தோனி. 2020ம் ஆண்டு தோனி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.  இந்நிலையில் தோனி அனைத்து வித கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் விலகப் போகிறார் என்ற தகவல் வெளியானது, இருப்பினும் கடந்த இரண்டு சீசன்களில் தோனி விளையாடி வருகிறார். இந்த ஆண்டும் சிஎஸ்கே அணிக்காக தோனி ஒரு வீரராக விளையாட உள்ளார். 

msd

சிஎஸ்கே அணியின் புதிய கேப்டனாக ஜடேஜா நியமிக்கப்பட்டுள்ளதால் ரசிகர்கள் சற்று ஆறுதலாக உள்ளனர். கடைசியாக ரவீந்திர ஜடேஜா கிரிக்கெட் அணிக்கு கேப்டனாக 28 அக்டோபர் 2007 அன்று ராஜ்கோட்டில் உள்ள மேற்கு ரயில்வே மைதானத்தில் வினூ மன்கட் U19 போட்டியில் மும்பை U19க்கு எதிராக சவுராஷ்டிரா U19 அணிக்கு தலைமை தாங்கினார். அதன் பிறகு பெரிதாக எந்த அணிக்கு தலைமை தாங்காத ஜடேஜா, தற்போது சி.எஸ்.கே அணிக்கு தலைமை தாங்க உள்ளார்.  தற்போது ஜடேஜாவிற்கு முன் இருக்கும் சவால் சி.எஸ்.கே போன்ற மிகவும் பெரிய அணியை வழிநடத்தி செல்வதே ஆகும்.  ஐபிஎல் ஏலத்தில் அணிக்கு வந்துள்ள புதிய வீரர்களுக்கு எவ்வாறு வாய்ப்பு கொடுப்பார் என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

மேலும் படிக்க | ஐபிஎல்-ல் கடைசி ஓவரில் அதிக சிக்ஸ்சர்கள் அடித்தது இவரா?

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News