இன்று தென் ஆப்பிரிக்கா செல்லும் இந்தியா: முழு விவரம் உள்ளே!!

சமீபத்தில் இலங்கை அணிக்கு எதிரான 3 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டி, மூன்று 20 ஓவர் போட்டிகள் இந்திய கிரிக்கெட் அணி விளையாடி வெற்றி பெற்றது. 

Last Updated : Dec 27, 2017, 03:35 PM IST
இன்று தென் ஆப்பிரிக்கா செல்லும் இந்தியா: முழு விவரம் உள்ளே!! title=

சமீபத்தில் இலங்கை அணிக்கு எதிரான 3 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டி, மூன்று 20 ஓவர் போட்டிகள் இந்திய கிரிக்கெட் அணி விளையாடி வெற்றி பெற்றது. 

இதைதொடர்ந்து இந்திய அணி அடுத்தாக தென்ஆப்பிரிக்காவில் விளையாடுகிறது. விராட்கோலி தலைமையிலான இந்திய அணி இன்று நள்ளிரவு தென்ஆப்பிரிக்கா புறப்பட்டு செல்கிறது. மும்பையில் இருந்து துபாய் சென்று அங்கிருந்து தென்ஆப்பிரிக்கா செல்கிறது இந்தியா அணி.

விராட்கோலி தனது மனைவி அனுஷ்காவுடன் தென்ஆப்பிரிக்கா செல்கிறார். இருவரும் அங்கு புத்தாண்டை கொண்டாடுகிறார்கள். புத்தாண்டை கொண்டாடியவுடன் அனுஷ்கா நாடு திரும்பி விடுவார். 

இந்திய அணி தென் ஆப்பிரிக்காவுடன் 3 டெஸ்ட், 6 ஒருநாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது. 

> முதல் டெஸ்ட் போட்டி ஜனவரி 5-ம் தேதி கேப்டவுனில் தொடங்குகிறது. மேலும் ஜனவரி 28-ம் தேதியுடன் டெஸ்ட் தொடர் முடிகிறது. 

> பிப்ரவரி 1-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை ஒருநாள் போட்டிகள் நடக்கிறது. இதில் ஒரு போட்டியை தவிர மற்ற 5 ஆட்டங்களும் பகல்-இரவாக நடக்கிறது. 

> பிப்ரவரி 18-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை 20 ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது. 

Trending News