இந்திய கிரிக்கெட் முகத்தை மாற்றிய கங்குலி மீண்டும் கேப்டன் - குஷியில் தாதா ரசிகர்கள்

இந்திய கிரிக்கெட் லெஜண்ட்ஸ் அணிக்கு பிசிசிஐ தலைவர் கங்குலி மீண்டும் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.  

Written by - க. விக்ரம் | Last Updated : Aug 12, 2022, 08:05 PM IST
  • லெஜண்ட்ஸ் கிரிக்கெட்டின் இரண்டாவது சீசன் நடக்கவிருக்கிறது
  • இந்திய அணிக்கு கங்குலி கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்
  • சேவாக்கும் இதில் களமிறங்குகிறார்
இந்திய கிரிக்கெட் முகத்தை மாற்றிய கங்குலி மீண்டும் கேப்டன் - குஷியில் தாதா ரசிகர்கள் title=

இந்தியாவில் கிரிக்கெட் மதம் என்று ஆகிவிட்டது. அந்த மதத்தில் பலர் இப்போதும் முக்கியமானவர்களாக இருக்கிறார்கள். அப்படிப்பட்டவர் சௌரவ் கங்குலி. இந்திய கிரிக்கெட் சோதனையான காலக்கட்டத்தில் இருந்தபோது அணியின் கேப்டனாக பொறுப்பேற்ற கங்குலி பல இளம் வீரர்களை அணிக்குள் கொண்டுவந்தார். அப்படி பலரை கொண்டுவந்து இந்திய கிரிக்கெட் முகத்தை மாற்றினார். வெளிநாடுகளில் இந்தியாவின் வெற்றிக்கொடி கங்குலியின் கேப்டன்சியின் கீழ்தான் அதிகம் பறந்தது. 2007ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்ற கங்குலி அதன் பிறகு சில வருடங்கள் ஐபிஎல்லில் களம் கண்டு அதிலிருந்தும் ஓய்வு பெற்றார்.

இதனைத் தொடர்ந்து சில காலம் அமைதியாக இருந்த கங்குலி பிசிசிஐ தலைவராக நியமனம் செய்யப்பட்டார். இந்தச் சூழலில், லெஜண்ட்ஸ் கிரிக்கெட் போட்டி என முன்னாள் வீரர்களை வைத்து நடைபெறும் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது சீசன் வரும் செப்டம்பர் 17ஆம் தேதி தொடங்குகிறது. ஆனால் கொல்கத்தாவில் வரும் செப்டம்பர் 16ஆம் தேதி ஒரு சிறப்பு ஆட்டம் நடைபெறுகிறது. 

Ganguly, Sehwag

இதில் இந்திய மகாராஜா அணியும் உலக ஜெயண்ட்ஸ் அணியும் மோதுகிறது. இந்தியா சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் நிறைவு பெற்றதை கொண்டாடும் விதமாக நடைபெறும் இந்தப் போட்டியில் கங்குலி இந்திய அணியின் கேப்டனாக செயல்பட உள்ளார். இதே போன்று அவருக்கு ஜோடியாக அதிரடி வீரர் வீரேந்திர சேவாக் அணியில் இடம்பெற்றுள்ளார். மேலும்,முகமது கைப்பும் இந்திய மகாராஜா அணியில் இடம்பெற்றுள்ளார்.

மேலும் படிக்க | ரிஷப் பன்டை மீண்டும் சீண்டிய பாலிவுட் இளம் நடிகை; தொடரும் வார்த்தை போர்

இவர்கள் தவிர, இர்பான் பதான், யூசுப் பதான், தமிழக வீரர் பத்ரிநாத், பர்த்தீவ் பட்டேல், ஸ்டூவர்ட் பின்னி, ஹர்பஜன் சிங், ஸ்ரீசாந்த் போன்ற அனுபவ வீரர்களும் ஆகியோரும் இந்திய மகாராஜா அணிக்காக விளையாட உள்ளனர். கடந்த சீசனில் அதிரடியாக விளையாடிய நமன் ஓஜா, அசோக் டிண்டா, பிரக்யான் ஓஜா, அஜய் ஜடேஜா, ஆர்பி சிங் மற்றும் ஜோகிந்தர் சர்மா போன்ற நட்சத்திர வீரர்களும் மகராஜா அணிக்காக விளையாடுகின்றனர். 

மேலும் படிக்க | நீரஜ் சோப்ராவா, ஆசிஷ் நெஹ்ராவா ? :பாக். நபருக்கு குட்டு வைத்த சேவாக்

இந்த தொடரின் ஆணையராக முன்னாள் கேப்டன் ரவி சாஸ்திரி செயல்பட உள்ளார். உலக ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டனாக இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மார்கன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கல்லீஸ், ஜெயசூர்யா, முத்தையா முரளிதரன் ஆகியோர் இந்த அணியில் இடம்பெற்றுள்ளனர்.

இந்திய மகாராஜா அணி:- 

கங்குலி (கேப்டன்), வீரேந்திர சேவாக், முகமது கைஃப், யூசுப் பதான், எஸ் பத்ரிநாத், இர்பான் பதான், பார்த்தீவ் படேல், ஸ்டூவர்ட் பின்னி, ஸ்ரீசாந்த், ஹர்பஜன் சிங், நமன் ஓஜா, அசோக் டிண்டா, பிரக்யான் ஓஜா, அஜய் ஜடேஜா, ஆர்.பி.சிங், ஜோகிந்தர் சர்மா, ரித்திந்தர் சிங் சோதி 

உலக ஜெயண்ட்ஸ் அணி:- 

இயன் மார்கன் (கேப்டன்), சிம்மன்ஸ், கிப்ஸ், காலிஸ், ஜெயசூர்யா, மாட் பிராயர், நாதன் மெக்குல்லம், ஜாண்டி ரூட்ஸ், முரளிதரன், டேல் ஸ்டெயின், மசகார்ட்சா, முர்த்தசா, ஆப்கான், மிட்செல் ஜான்சன், பிரெட் லீ, கேவின் ஓ பிரெயின், தினேஷ் ராம்டின்.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

Trending News