முதல் சதத்தை பதிவு செய்த ஸ்மிருதி மந்தனா! வலுவான நிலையில் இந்தியா!

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பகல் இரவு டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வலுவான நிலையில் உள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 1, 2021, 02:05 PM IST
  • மெக்கெய்யில் நடைபெற்ற 3வது ஒருநாள் போட்டி இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு எதிராக 26 போட்டிகளில் தொடர் தோல்விக்கு பிறகு வெற்றி பெற்று சாதனை படைத்தது.
  • இந்திய அணியின் தொடக்க வீரர் ஸ்மிருதி மந்தனா இந்த போட்டியில் தனது முதல் டெஸ்ட் சத்தத்தை பதிவு செய்தார்.
முதல் சதத்தை பதிவு செய்த ஸ்மிருதி மந்தனா! வலுவான நிலையில் இந்தியா! title=

ஆஸ்திரேலிய நாட்டிற்கு சுற்று பயணம் சென்றுள்ள இந்திய அணி 3 ஒரு நாள் போட்டி, ஒரு டெஸ்ட் மற்றும் 3 டி 20 போட்டிகளில் விளையாடி வருகிறது.  21 ம் தேதி நடைபெற்ற முதல் ஒரு நாள்  போட்டியில் ஆஸ்திரேலிய  அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.  அதன் பின் நடைப்பெற்ற 2வது ஒரு நாள் போட்டியிலும் ஆஸ்திரேலிய  அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது தொடரை கைப்பற்றியது. 

மெக்கெய்யில் நடைபெற்ற 3வது ஒருநாள் போட்டி இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு எதிராக 26 போட்டிகளில் தொடர் தோல்விக்கு பிறகு வெற்றி பெற்று சாதனை படைத்தது.  இந்த போட்டியில் இந்திய அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.  இந்நிலையில் இந்திய ஆஸ்திரேலிய  மோதும் பகல் இரவு டெஸ்ட் போட்டி நேற்று குயின்ஸ்லாந்தில் தொடங்கியது.  டாஸ் வென்ற ஆஸ்திரேலிய  முதலில் பீல்டிங் தேர்வு செய்தது.

1

ஒருநாள் தொடரை தோற்ற இந்திய அணி டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற வேண்டி ஆரம்பம் முதலே நிதானமாக ஆடியது.  இந்திய அணியின் தொடக்க வீரர் ஸ்மிருதி மந்தனா இந்த போட்டியில் தனது முதல் டெஸ்ட் சத்தத்தை பதிவு செய்தார்.  216 பந்துகளில் 127 ரன்கள் அடித்து வெளியேறினார்.  அதன் பின் வந்த ஷஃபாலி வர்மா, புனம் ரவுத் 30 ரங்களுக்கு மேல் அடிக்க முதல் இன்னிங்சில் வலுவான நிலை பெற்றுள்ளது.

indai

96 ஓவர் முடிவில் 268 ரங்களுக்கு 4 விக்கெட்டை இழந்துள்ளது இந்திய அணி.  மித்தாலி ராஜ் மற்றும் தீப்தி சர்மா காலத்தில் உள்ளனர்.  முதல் இன்னிங்சில் மிகப்பெரிய ரன்களை சேர்க்கும் பட்சத்தில் இந்த டெஸ்டில் இந்திய அணி வெற்றி பெற அதிக வாய்ப்பு உள்ளது.  முதல் டி 20 போட்டி அக்டோபர் 7ம் தேதி தொடங்க உள்ளது.

ALSO READ டி20 உலக கோப்பை 2021: எந்த அணியில் யார் யார் இடம் பெற்றுள்ளனர்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News