ஆசிய விளையாட்டு 2018 போட்டியின் 10 மீட்டர் துப்பாக்கிச் சுடுதல் பிரிவில், இந்தியாவின் தீபக் குமார் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்!
18_வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இந்தோனேசியாவின் ஜகார்த்தா மற்றும் பலேம்பங் நகரங்களில் கடந்த ஆகஸ்ட் 18 ஆம் தேதி துவங்கி நடைபெற்று வருகின்றன.
இந்தி ஆசிய விளையாட்டு போட்டிகளில் சுமார் 45 நாடுகள் பங்கேற்றுள்ளது. செப்டம்பர் 2-ஆம் தேதி வரை நடைபெறும் இந்த போட்டிகளில் தடகளம், டென்னிஸ், பேட்மிண்டன், மல்யுத்தம், குத்துச்சண்டை, ஆக்கி, கபடி உள்பட 40 வகையான போட்டிகள் நடைபெறுகிறது.
#AsianGames2018: Indian Shooter Deepak Kumar wins silver medal in Men's 10m Air Rifle event pic.twitter.com/2kw2PBCMpJ
— ANI (@ANI) August 20, 2018
இந்நிலையில் இத்தொடரின் இரண்டாம் நாளான இன்று பலேம்பங்கில் ஆடவருக்கான 10 மீட்டர் ஏர் ரைஃபிள் பிரிவு துப்பாக்கிச் சுடுதல் போட்டி நடைபெற்றது.
இப்போட்டியில் இந்திய வீரர்கள் மானவ்ஜித் சிங், ஷ்ரேயாசி சிங், ரவிக்குமார், தீபக் குமார், அபுர்வி சந்தேலா, இளவேனில் வளரிவான் ஆகியோர் பங்கேற்றனர். ஆனால் இதில் தீபக் குமார் மட்டும் 247.7 என்ற புள்ளிகளை பெற்று இரண்டாம் இடம் பிடித்தார். இந்த வெற்றியின் மூலம் இவர் இந்தியாவிற்கு வெள்ளி பதக்கம் பெற்றுத் தந்துள்ளார்!