மும்பை இந்தியன்ஸ் பற்றி சச்சின் தெண்டுல்கர் மகள் கூறியது இதுதான்

மும்பை இந்தியன்ஸ் அணிக்காக முதல் போட்டியில்  சச்சினின் மகன் அர்ஜூன் தெண்டுல்கர் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Written by - S.Karthikeyan | Last Updated : Apr 16, 2022, 08:51 AM IST
  • மும்பை இந்தியன்ஸூக்கு அறிமுகமாகும் அர்ஜூன் தெண்டுல்கர்
  • லக்னோ அணிக்கு எதிரான முதல் போட்டியில் களமிறங்குகிறார்
  • மகிழ்ச்சியில் சாரா தெண்டுல்கர் போட்ட பதிவு
மும்பை இந்தியன்ஸ் பற்றி சச்சின் தெண்டுல்கர் மகள் கூறியது இதுதான் title=

ஐபிஎல் தொடரில் தொடர்ந்து 5 தோல்விகளை சந்தித்துள்ள மும்பை அணி, 6வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இப்போட்டியில் சச்சின் தெண்டுல்கரின் மகன் அர்ஜூன் தெண்டுல்கர் களமிறங்கலாம் என கதிர்பார்க்கப்படுகிறது. மும்பை அணியும் சமூக ஊடகங்களில் அர்ஜூன் தெண்டுல்கரை களமிறக்குவது பற்றி யோசித்து வருவதாக தெரிவித்துள்ளது. 

அர்ஜூன் தெண்டுல்கரை மும்பை அணி 20 லட்சம் ரூபாய்க்கு ஐபிஎல் ஏலத்தில் எடுத்தது. இடதுகை வேகப்பந்துவீச்சாளரான அவர், மும்பை அணிக்கு களமிறங்க ஆர்வமாக உள்ளார். கடந்த 5 போட்டிகளிலும் மும்பை அணியில் பந்துவீச்சில் சரியாக அமையாததால் அர்ஜூன் தெண்டுல்கருக்கு வாய்ப்பளிக்க மும்பை அணி முடிவு செய்துள்ளது.  

மேலும் படிக்க | சச்சின் காலில் விழுந்த பஞ்சாப் அணியின் பயிற்சியாளர்

ஒருவேளை அவர் களமிறக்கப்பட்டால், பசில் தம்பி அல்லது ஜெய்தேவ் உனட்கட் ஆகியோரில் ஒருவர் வெளியே உட்கார வைக்கப்படுவார்கள். மேலும், அர்ஜூன் தெண்டுல்கருக்கு இது முதல் ஐபிஎல் போட்டியாகவும் அமையும். அர்ஜூன் தெண்டுல்கரை களமிறக்குவது பற்றி யோசிப்பதாக மும்பை அணி தெரிவித்ததும், உடனே மகிழ்ச்சியின் உச்சத்துக்கு சென்றார் அவரது சகோதரியான சாரா தெண்டுல்கர். மும்பை அணிக்கு நீல நிறத்தில் லவ் சிமிலியை வரிசையாக அனுப்பினார். அவரின் இந்த பதிவு சோஷியல் மீடியாவில் வைரலாகியுள்ளது. 

5 ஆட்டங்களில் தோல்வியை தழுவியுள்ள மும்பை அணியின் பிளே ஆஃப் சுற்று கேள்விக்குறியாகியுள்ளது. இனி வரும் அனைத்து போட்டிகளிலும் வென்றால் மட்டுமே அந்த அணிக்கான வாய்ப்பு பற்றி யோசிக்க முடியும். அதேநேரத்தில் லக்னோ அணி 5 போட்டிகளில் விளையாடி 3 வெற்றிகளை பெற்றுள்ளது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான இன்றைய போட்டி பிரபோர்ன் மைதானத்தில் பிற்பகல் 3.30 மணிக்கு நடைபெற இருக்கிறது. 

மேலும் படிக்க | கோலியை தொடர்ந்து கேப்டன் பதவியில் இருந்து விலகிய மற்றொரு வீரர்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துகொள்ளவும், உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைதளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

ஃபேஸ்புக்கில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News