இந்திய கிரிக்கெட் டிரெஸ்ஸிங் ரூமில் ஒவ்வொரு போட்டி முடிந்தபிறகும் சிறந்த பீல்டர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு மெடல் பரிசாக கொடுக்கப்படுகிறது. இது வீரர்களுக்கும் பெரும் உற்சாகத்தை கொடுத்துக் கொண்டிருக்கும் அதேவேளையில் சிறந்த பீல்டர் அறிவிப்பு ஒவ்வொரு போட்டிக்கும் வித்தியாசமான முறையில் அறிவிக்கப்படுகிறது. முதல் போட்டியில் டிரெஸ்ஸில் ரூமில் அறிவிக்கப்பட்ட நிலையில், அடுத்த போட்டியில் டிரோன் கேமரா, மைதானத்தில் இருக்கும் பெரிய ஸ்கீரின், லேசர் லைட்டில் சிறந்த பீல்டரின் பெயர் என நாளுக்கு நாள் பெஸ்ட் பீல்டர் அறிவிப்பு மட்டும் அடுத்த லெவலுக்கு சென்று கொண்டே இருக்கிறது. இம்முறை, அதாவது இலங்கை அணிக்கு எதிரான வெற்றிக் பிறகும் அனைத்து வீரர்களும் மிகுந்த எதிர்பார்ப்புடன் சிறந்த பீல்டருக்கான மெடல் அறிவிப்பை ஆர்வமுடன் எதிர்நோக்கி காத்திருந்தனர்.
மேலும் படிக்க | ஒரே போட்டியில் சச்சின் சாதனையை ஊதி தள்ளிய விராட்.. இன்னும் லிஸ்ட் இருக்கு
அப்போது ஸ்கிரீனில் திடீரென தோன்றிய சச்சின், தன்னுடைய வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் அனைத்து வீரர்களுக்கும் தெரிவித்துக் கொண்டார். கடைசியாக இலங்கை அணிக்கு எதிராக சிறப்பாக பீல்டிங் செய்ததாக ஸ்ரேயாஸ் அய்யர் பெயரை அறிவித்தார். அதன்பிறகு ஸ்ரேயாஸூக்கு மெடல் பரிசாக கொடுக்கப்பட்டது. இப்போட்டியில் பேட்டிங்கிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் ஸ்ரேயாஸ். 56 பந்துகளை எதிர்கொண்ட அவர் 82 ரன்கள் விளாசினார். இதில் சிக்சர்களும், அதில் ஒன்று மெகா சிக்சரும் அடங்கும். அதாவது 106 மீட்டர் சிக்சரை ஸ்ரேயாஸ் அடித்தார். மிடில் ஆர்டரில் அவர் அதிரடியாக ஆடியதால் இந்திய அணி 350 ரன்களுக்கும் மேல் குவிக்க முடிந்தது.
ஆனால், இவ்வளவு சொற்ப ரன்களுக்கு இலங்கை அணி ஆல்அவுட்டாகும் என யாருமே எதிர்பார்க்கவில்லை. பும்ரா, முகமது ஷமி, சிராஜ் மூன்று பேரும் சுற்றிவளைத்து இலங்கை அணியை எழ விடாமல் அடித்துவிட்டனர். பொதுவாக மும்பை வான்கடே மைதானம் என்பது பேட்டிங் பிட்ச். இங்கு டாஸ் எந்த அணி வெற்றி பெற்றாலும் கண்ணை மூடிக் கொண்டு பந்துவீச்சை தேர்வு செய்வார்கள். சேஸிங்கில் எவ்வளவு பெரிய ஸ்கோராக இருந்தாலும் இந்த மைதானத்தில் அடித்துவிடலாம். ஆனால், நேற்று நடந்த கதையே வேறு. டாஸ் வெற்றி பெற்றது இலங்கை கேப்டன் குஷால் மென்டிஸ் தான். அவரும் பந்துவீச்சை தான் தேர்வு செய்தார். ஆனால் பேட்டிங்கில் சொதப்புவோம் என டாஸின்போது கொஞ்சம் கூட நினைத்து பார்த்திருக்க மாட்டார். முடிவில் உலக கோப்பையில் மிகப் பெரிய அவமானகரமான தோல்வியை இலங்கை சந்திக்க வேண்டியிருந்ததது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ