மறக்க முடியாத தருணம்!! சென்னை ஊழியரை தேடும் சச்சின் டெண்டுல்கர்

கிரிக்கெட் உலகின் கடவுளாகவே போற்றப்படும் சச்சின் டெண்டுல்கர் சென்னை ஊழியரை தேடி வருகிறார். உங்களால் முடிந்தால் அவருக்கு உதவி செய்யுங்கள்

Written by - Shiva Murugesan | Last Updated : Dec 14, 2019, 12:49 PM IST
மறக்க முடியாத தருணம்!! சென்னை ஊழியரை தேடும் சச்சின் டெண்டுல்கர் title=

புது டெல்லி: சென்னையில் இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் விளையாடிய ஒரு போட்டியின் போது சென்னை 5 ஸ்டார் சொகுசு ஹோட்டலான தாஜ் கோரமண்டல் (Taj Coromandel) நிறுவன ஊழியர் ஒருவர் கிரிக்கெட் உலகின் கடவுளாகவே போற்றப்படும் சச்சின் டெண்டுல்கரருக்கு சில அறிவுரைகளை வழங்கி உள்ளார். அது அறிவுரை சச்சினுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. ஆனால் அவர் யார் என்று சச்சினுக்கு தெரியவில்லை. அந்த ஊழியரின் பெயர் கூட அவருக்கு தெரியாது. ஆனால் அவரை சந்திக்க சச்சின் டெண்டுல்கர் ஆசை படுகிறார். அந்த ஊழியரை கண்டுபிடிக்க உதவமாறு நெட்டிசன்களிடம் வேண்டுகோள் வைத்துள்ளார். 

அதுக்குறித்து அவர் தனது சமூக வலைத்தளமான ட்விட்டரில் கோரிக்கை வைத்துள்ளார். அவர் கூறியது, "எதிர்பாராத சந்திப்புகள் சில சமயம் மறக்க முடியாத தருணங்களாக மாறுகின்றன. IND vs WI தொடரின் போது சென்னை Taj Coromandel ஊழியர் ஒருவர் என்னுடைய Elbow Guard பற்றி கூறிய அறிவுரை மிகவும் உதவியது. அவரை இப்போது சந்திக்க ஆசை படுகிறேன், கண்டுபிடிக்க எனக்கு நீங்கள் அனைவரும் உதவவேண்டும்." எனக் கூறியுள்ளார்.

தற்போது அந்த ஊழியரை சச்சின் தேட முக்கியக் காரணம், நாளை இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதல் ஒரு நாள் போட்டி சென்னையில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது. அதனால் அவரை மீண்டும் சந்திக்க விருப்பம் தெரிவித்து, அவரை கண்டுபிடிக்க உதவி செய்யுங்கள் என கோரிக்கை வைத்துள்ளார்.

உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.

 

Trending News