தென்னாப்பிரிக்காவின் சாபக்கேடு
தென்னாப்பிரிக்கா அணிக்கு உலக கோப்பை போன்ற பெரிய தொடர்களில் ஆரம்ப கட்ட ஆட்டங்களில் சிறப்பாக விளையாடி, முக்கியமான போட்டிகளில் தோல்வியடையும் சோகம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இது அந்த அணிக்கு இருக்கும் சாபக்கேடு என்றே கிரிக்கெட் உலகினர் கிண்டலாக கூறுவதுண்டு. இன்றைய ஆட்டத்திலும் நெதர்லாந்து அணியை வீழ்த்தியிருந்தால் 20 ஓவர் உலக கோப்பையில் அரையிறுதி வாய்ப்பை எட்டியிருக்கலாம். ஆனால், இந்தியா போன்ற பெரிய அணியை எல்லாம் வீழ்த்திவிட்டு கத்துக்குட்டி அணி என வர்ணிக்கப்படும் நெதர்லாந்து அணியிடம் படுதோல்வி அடைந்து 20 ஓவர் உலக கோப்பை தொடரில் இருந்து வெளியேறி இருக்கிறது அந்த அணி.
பவுமாவின் தவறான முடிவு
பவுமா தலைமையில் களம் கண்ட தென்னாப்பிரிக்கா, நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வெற்றி பெற்று பவுலிங்கை தேர்வு செய்தது. கேப்டன் பவுமா சேஸிங் தேர்வு செய்ததே பலருக்கும் வியப்பாக இருந்தது. ஏனென்றால் நெதர்லாந்து போன்ற சிறிய அணிக்கு, சேஸிங் பிரஷரில் ஆடிய அனுபவம் எல்லாம் கிடையாது. இத்தனைக்கும் தென்னாப்பிரிக்கா அணியில் ரபாடா, நோர்க்கியா, லுங்கி இங்கிடி, பர்னெல் என உலக தரம் வாய்ந்த ஸ்டார் பவுலர்கள் எல்லாம் இருக்கின்றனர். அவர்களை வைத்துக் கொண்டு எந்த ஸ்கோர் முதலில் அடித்தாலும், நெதர்லாந்து அணியை துல்லியமாக பந்துவீசி வீழ்த்தியிருக்க முடியும். ஆனால், எதற்காக பவுமா பவுலிங்கை தேர்வு செய்தார் என்றே கணிக்க முடியவில்லை.
நெதர்லாந்து அணி அபாரம்
கத்துக்குட்டி அணியான நெதர்லாந்து முதலில் பேட்டிங் ஆட வாய்ப்பு கிடைத்ததை சரியாக பயன்படுத்திக் கொண்டு 158 ரன்கள் எடுத்தாலும், சேஸிங் ஆடிய தென்னாப்பிரிக்கா வீரர்களுக்கு துல்லியமாக பந்துவீசி நெருக்கடி கொடுத்தது. அனுபவம் வாய்ந்த பேட்ஸ்மேன்கள் இருந்தாலும் தென்னாப்பிரிக்கா வீரர்கள் மேட்ச் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் ஆடியதுபோலவே தெரியவில்லை. அவர்களின் பேட்டிங் ஸ்டைல் எப்படியும் தோற்றுவிடுவோம் என்கிற ரீதியிலும், பார்த்துக்கொள்ளலாம் என்ற மமதையிலும் ஆடியது போல இருந்தது. கடைசியில் 145 ரன்கள் மட்டுமே எடுத்து நெதர்லாந்து அணியிடம் தோல்வி அடைந்தது மட்டுமல்லாமல், 20 ஓவர் உலக கோப்பையில் அரையிறுதிக்கு ஈஸியாக செல்லக்கூடிய வாய்ப்பையும் இழந்தது.
பாகிஸ்தான் ஹேப்பி அண்ணாச்சி
இவ்வளவு எளிமையான ஆட்டத்தை கடினமாக்கி தோற்கும் ஸ்டைல் தென்னாப்பிரிக்கா அணிக்கு பழகிய ஒன்று தான். ஏற்கனவே இதுபோன்ற பெரிய தொடர்களில் எல்லாம் இப்படி தான் தோற்பார்கள். ஆனால், இம்முறை அது நடக்காது என நினைத்தவர்களுக்கு, இல்லை செய்து காட்டுவோம் என தோற்று காட்டியிருக்கிறார்கள். அதேநேரத்தில் மறுபுறம் பலம் வாய்ந்த அணியை வீழ்த்தியிருக்கிறோம் என்ற மகிழ்ச்சியில் நெதர்லாந்து அணியினர் இருந்தனர். தென்னாப்பிரிக்காவின் தோல்வியால் புது உத்வேகம் பெற்ற பாகிஸ்தான் அணி, அடுத்த போட்டியில் வங்கதேசத்தை வீழ்த்தி 20 ஓவர் உலக கோப்பையில் அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்து கொண்டாட்டத்தில் இருக்கிறது.
மேலும் படிக்க | வங்கதேச வீரர்கள் உணவருந்தியபோது விராட் கோலி கொடுத்த அதிர்ச்சி!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ