’ஹிட்மேன்’ சிக்சரில் மெகா சாதனை படைத்த ரோகித் சர்மா..!

ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அதிவேகமாக 550 சிக்சர்களை அடித்தவர் என்ற மகத்தான சாதனையை படைத்துள்ளார் இந்திய அணியின் கேப்டன் ஹிட்மேன் ரோகித் சர்மா.  

Written by - S.Karthikeyan | Last Updated : Sep 27, 2023, 07:06 PM IST
  • ரோகித் சர்மா இமாலய சாதனை
  • 550 சிக்சர்கள் அடித்துள்ளார்
  • கிறிஸ் கெயில் சாதனை முறியடிக்க வாய்ப்பு
’ஹிட்மேன்’ சிக்சரில் மெகா சாதனை படைத்த ரோகித் சர்மா..! title=

ஆஸ்திரேலியா இமாலய இலக்கு

இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள் போட்டி ராஜ்கோட்டில் நடைபெற்றது. இதில் டாஸ் வெற்றி பெற்ற அந்த அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ், ஸ்மித் மற்றும் லாபுசேன் ஆகியோரின் அதிரடி ஆட்டத்தால் அந்த அணி 50 ஓவர்கள் முடிவில் 352 ரன்கள் குவித்தது. மார்ஷ் ஆடிக் கொண்டிருந்தபோது, ஒரு கட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 500 ரன்களையும் கடக்க வாய்ப்பிருந்தது. ஆனால், அதன்பிறகு விக்கெட்டுகள் சீரான இடைவெளியில் விழுந்ததால் அந்த அணி எதிர்பார்த்ததை விட குறைவான ரன்களை மட்டுமே எடுத்தது. மார்ஷ் 96 ரன்களுக்கு அவுட்டானார்.

மேலும் படிக்க | ஆஸ்திரேலியா செட் செய்த இமாலய இலக்கு - இந்தியா இதை செய்தால் வைட்வாஷ் செய்யலாம்

இந்திய அணியின் சேஸிங்

இதனையடுத்து மிகப்பெரிய இமாலய இலக்கை நோக்கி இந்திய அணி சேஸிங்கை தொடங்கியது. ரோகித் சர்மாவுடன் யார் ஓப்பனிங் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டபோது தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் களமிறங்கினார். ஒருபுறம் ரோகித் சர்மா சிக்சர்களாக அடித்துக் கொண்டிருக்கும்போது மறுமுனையில் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் சுந்தர். பின்னர் 30 பந்துகளில் 18 ரன்கள் எடுத்திருந்தபோது கேட்ச் என்ற முறையில் அவுட்டானார்.

ரோகித் சர்மா இமாலய சாதனை

இந்தப் போட்டியில் அரைசதம் அடித்த ரோகித் சர்மா, பந்துகளை சிக்சருக்கும் பவுண்டரிக்கும் அடிக்கடி விளாசிக் கொண்டிருந்தார். குறிப்பாக 5 சிக்சர்களை விளாசிய அவர், 550 சிக்சர்களை அதிவேகமாக அடித்த சர்வதேச கிரிக்கெட் வீரர் என்ற பெருமைக்கு சொந்தக்காரரானார். 550 சிக்சர்களுக்கும் மேலாக அடித்தவர்கள் பட்டியலில் கிறிஸ் கெயில் முதல் இடத்தில் இருக்கிறார். அவருக்கு அடுத்த இடத்தில் இப்போது ரோகித் சர்மா இருக்கிறார். அதேபோல், ஒரே நாட்டில் அதிக சிக்சர்கள் அடித்தவர்கள் பட்டியலிலும் ரோகித் முதல் இடத்தை பிடித்திருக்கிறார். அவர் இந்தியாவில் மட்டும் 257 சிக்சர்களை விளாசியிருக்கிறார். ரோகித் சர்மாவின் இந்த சாதனைக்கு கிரிக்கெட் ரசிகர்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

மேலும் படிக்க | IND vs AUS: ஷ்ரேயாஸ் ஐயருக்கு விட்டுக்கொடுத்த விராட்... அணியில் ஸ்டார்க், மேக்ஸ்வெல் - மாற்றங்கள் என்ன?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News