IPL 2019 தொடரின் இறுதி போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி பரபரப்பு வெற்றி பெற்றது!
IPL 2019 தொடரின் இறுதி போட்டி இன்று ஐதராபாத் ராஜிவ் காந்தி கிரிக்கெட் மைதானத்தில் நடைப்பெற்று வருகிறது. இப்போட்டியில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் விளையாடின.
இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது. துவக்க வீரராக களமிறங்கிய குவிண்டன் டீ காக் 29(17) மற்றும் ரோகித் ஷர்மா 15(14) ரன்களில் வெளியேற இவர்களை தொடர்ந்து வந்த வீரர்களும் இரட்டை இலக்க ரன்களில் வெளியேறினர்.
அணியில் அதிகபட்சமாக பொல்லார்ட் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 41(25) ரன்கள் குவித்தார். இதன் காரணமாக நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் குவித்தது.
சென்னை அணியின் தீபக் சஹர் 3 விக்கெட், சர்துல் தாக்கூர், இம்ரான் தாஹிர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். இதனைத்தொடர்ந்து 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களமிறங்கியது.
துவக்க வீரர்களாக களமிறங்கிய டூப்ளசிஸ் 26(13) ரன்களில் வெளியேற, மறு முனையில் வாட்சன் அதிரடியாக விளையாடி 80(59) ரன்கள் குவித்தார். எனினும் இவர்களை தொடர்ந்த வந்த வீரர்கள் அடுத்தடுத்த சொற்ப ரன்களில் வெளியேற சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 148 ரன்கள் மட்டுமே குவித்தது. இதன் காரணமாக மும்பை அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 4-வது முறையாக சாம்பியன் பட்டம் தட்டி சென்றது.